Loading...
 

கண்ணோட்டம்

 

பொதுவான கண்ணோட்டம்

எங்கள் கல்வித் திட்டம் அனுபவம் வாய்ந்த பேச்சாளர்களாலும், வயது வந்தோர் கல்வியில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த வல்லுநர்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உறுதியான மற்றும் சமகால அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது; இது பொது சொற்பொழிவு, உத்வேகம், தன்னம்பிக்கை, தோற்றம், பதட்டத்தைக் கட்டுப்படுத்துவது, ஊக்கமளிப்பது மற்றும் தலைமை பங்காற்றுவது ஆகியவற்றில் என்னென்ன விஷயங்கள் வேலை செய்யும், எவையெல்லாம் வேலை செய்யாது என்பது பற்றியது.

இது இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: 'தொடர்பு மற்றும் பொது சொற்பொழிவாற்றும் திறன்' மற்றும் இவற்றுக்கு இணையான, 'தலைமைத்துவம் வகிக்கும் திறன்'. இந்தத் திட்டத்தை நீங்கள் ஒவ்வொன்றாக நிறைவு செய்கையில், உங்களுக்கு அங்கீகார சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

 

Educational Program Overview

 

பொது சொற்பொழிவுக்கான பிரிவு

பொது சொற்பொழிவு பிரிவில் ஒரு கட்டாய அடிப்படை வரிசை அமைப்பும் மற்றும் பல விருப்ப மேம்பட்ட வரிசை அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இது மிகவும் எளிமையான செயல்திட்டங்களில் இருந்து தொடங்கி, மிகவும் சிக்கலான மற்றும் சவாலான திட்டங்களுக்கு உங்களை மெதுவாக அழைத்துச் செல்கிறது, இதில் நீங்கள் முதலில் உங்கள் சக கிளப் உறுப்பினர்களுக்கு முன்னால் பேசுவீர்கள். அங்கிருந்து, கூடுக்கு வெளியே உங்கள் சிறகுகளை விரித்து, பெருமளவிலான பார்வையாளர்களுக்கு முன்னால் சொற்பொழிவாற்றுவீர்கள்.

வரிசை அமைப்பு ஒவ்வொன்றிலும், வெவ்வேறு செயல்திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு செயல்திட்டமும் ஒரு குறிப்பிட்ட கற்றல் நோக்கம் மற்றும் குறிக்கோள்களைக் கொண்டிருக்கும், பொது சொற்பொழிவாற்றுவது அல்லது தலைமைப்பாத்திரம் வகிப்பது என குறிப்பிட்ட திறன்களைப் பெறவும் பயிற்சி செய்யவும் உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அடிப்படை கல்வி வரிசை அமைப்பு செயல்திட்டங்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன: ஒன்றில் நீங்கள் சொற்பொழிவை பகுப்பாய்வு செய்ய வேண்டும், இரண்டாவதில் ஒரு குறிப்பிட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி நீங்கள் சொற்பொழிவை வழங்க வேண்டும். இந்தப் பகுதிகளை வெவ்வேறு சந்திப்புகளில் நீங்கள் செய்ய வேண்டும்.

Basic Educational Path

 

ஒவ்வொரு செயல்திட்டத்தின் ஆவணங்களும் ஆன்லைனில் கிடைக்கிறது.

செயல்திட்டங்கள் அனைத்தும் இலக்குகள், நேரங்கள், என்னென்ன பயன்படுத்தலாம் மற்றும் பயன்படுத்தக்கூடாது, செயல்திட்டத்தை எவ்வாறு மதிப்பிடுவது, உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் போன்ற விவரங்களுடன் ஒரே மாதிரியான டெம்ப்ளேட்டைப் பின்பற்றுகின்றன. 

நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வேகத்தில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லலாம், நீங்கள் சௌகரியமாக உணரும்போது மட்டும் அடுத்த நிலைக்குச் செல்லலாம். நீங்கள் ஒரே செயல்திட்டங்களை மீண்டும் மீண்டும் செய்யலாம் அல்லது பழைய செயல்திட்டங்களுக்கு மீண்டும் செல்லலாம். வேகமாக நிறைவு செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை, மேலும் எந்த கட்டத்தையும் அல்லது செயல்திட்டத்தையும் நிறைவு செய்ய குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை, இருப்பினும் நீங்கள் ஒரு வருடத்திற்குள் அடிப்படை கல்வி வரிசை அமைப்பை நிறைவு செய்ய முயற்சிக்க வேண்டும்.

நீங்கள் அடிப்படை கல்வி வரிசை அமைப்பை நிறைவு செய்தவுடன், சிறப்புச் சூழ்நிலைகள் அல்லது சூழல்களில் பொது சொற்பொழிவாற்றும் குறிப்பிட்ட  மேம்பட்ட வரிசை அமைப்புகளுக்கான அணுகலை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் ஒரு கதை சொல்பவராக, ஒரு வணிகத்தை முன்வைப்பவராக, ஒரு கல்வியாளராக அல்லது பற்பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

பேச்சாளர் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே கல்வித் திட்டமும் நுட்பங்களை செயற்கையான முறையில் உங்கள் மீது புகுத்தும் விதமாக இல்லாமல், உங்கள் சொந்த பாணியைக் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, கல்வித் திட்டம் அவ்வாறு உங்கள்மீது திணிக்கப்பட்டால், அது பார்வையாளர்கள் நீங்கள் பேசுவதை செயற்கையாகவும், இன்னும் சில மோசமான சூழலில், உங்களை நேர்மையில்லாதவராகவும் பார்ப்பதற்கு வழிவகுத்துவிடும். 

 

அமைப்புமுறை

அடிப்படை கல்வி திட்டம் இரண்டு முக்கிய தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது

அடிப்படை கல்வி திட்டத்தில் உள்ள மூன்று பிரிவுகளாவன:

  • "ஆரம்ப செயல்திட்டங்கள்" - இது எளிதான செயல்திட்டங்களின் தொகுப்பு, இது பொது சொற்பொழிவாற்றும் உலகில் உங்கள் முதல் அடிகளை எடுத்து வைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதில் பார்வையாளர்களுக்கு முன்னால் நிற்கும்போது ஏற்படும் பயம் உங்களுக்குப் போய்விடும்.
  • "சொற்பொழிவாற்றுவதன் அடிப்படைகள்-இது பொது சொற்பொழிவாற்றுவதில் உள்ள அடிப்படை நுட்பங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் செயல்திட்டங்களின் தொகுப்பு, இந்த நுட்பங்கள் அனைத்து வகையான சொற்பொழிவுகளுக்கும் பொருந்தும்.
  • "சொற்பொழிவாற்றுவதன் நுட்பங்கள்- இந்தப் பிரிவில் உள்ள செயல்திட்டங்களுக்கு பயிற்சி அதிகம் தேவை. இதில் நீங்கள் நிகழ்வுகள், உணர்ச்சி, நகைச்சுவை போன்ற மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துவீர்கள், இது சில வகையான சொற்பொழிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை பெரிதும் அதிகரிக்கிறது.

மேம்பட்ட கல்வி வரிசை அமைப்புகள் - அடிப்படை வரிசை அமைப்பை நிறைவு செய்தவுடன், நீங்கள் மேம்பட்ட கல்வி வரிசை அமைப்பை "அணுகுவீர்கள்". ஒவ்வொரு மேம்பட்ட வரிசை அமைப்பிலும் பல செயல்திட்டங்கள் உள்ளன, இவை குறிப்பிட்ட சொற்பொழிவாற்றும் நுட்பங்கள், சூழ்நிலைகள் அல்லது சூழல்களை ஆராய்ந்து அறியும் விதமாக இருக்கும் - அதாவது வணிகச் சூழல்களில் பேசுவது, கதை சொல்வது, கல்வி ரீதியிலான சொற்பொழிவாற்றுவது மற்றும் பற்பல.

மேம்பட்ட வரிசை அமைப்புகளில் நீங்கள் அடுத்தடுத்த நிலைக்குச் செல்வதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிறுத்தி வைத்து, மீண்டும் தொடங்கலாம். இங்கே நீங்கள் மிகவும் மேம்பட்ட செயல்திட்டங்களை மட்டுமல்லாமல் மிகவும் திருப்திகரமான திட்டங்களைக் காணலாம். நீங்கள் மற்ற நிறுவனங்களுக்கு முன்னால் சொற்பொழிவாற்ற வேண்டும், உண்மையான தலைமை பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும், மேலும் உங்கள் சொந்த கிளப்புக்கு வெளியே, நிஜ உலகில், கட்டுப்பாடற்ற ஒரு சூழலில் நிறைய பணியாற்ற வேண்டும். மேம்பட்ட கல்வி வரிசை அமைப்புகள் கூட்டை விட்டு "நீங்களாகவே சிறகடித்து பறக்க" உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தலைமைத்துவத்திற்கான பிரிவு

தலைமைத்துவத்திற்கான பிரிவுகளும் உங்கள் கிளப்பில் குறிப்பிட்ட செயல்பாடுகளில் முன்னிலை வகிப்பது போன்ற எளிமையான விஷயங்களிலிருந்து தொடங்கி, உங்கள் சமூகத்தில் நேர்மறையான முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் லட்சியம் நிறைந்த இலக்குகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

தகவல்தொடர்பு பகுதிக்கு எந்தத் தலைமைப் பணிகளும் தேவையில்லை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்: நீங்கள் எந்தவித தலைமைத்துவ நடவடிக்கைகளையும் கையாளாமல் மிகவும் வெற்றிகரமான (மற்றும் அதிக ஊதியம் பெறும்) வல்லுநர் பொது பேச்சாளராக இருக்க முடியும். இருப்பினும், தலைமைத்துவப் பிரிவு வித்தியாசமானது: தலைவர்களுக்கு (தலைமைப் பாத்திரம் வகிப்பவர்களுக்கு) விரிவான தொழில்நுட்ப அறிவு மற்றும் திறமைகள் மற்றும் சிறப்பாக சொற்பொழிவாற்றும் திறமைகள் இருக்க வேண்டும்.

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 13:53:18 CET by agora.