Loading...
 

உறுப்பினர் கட்டணங்கள்

 

 

Agora உடைய பொருளாதார மாதிரி

 

உடைய நிலைத்தன்மை மாதிரியானது உறுப்பினராக சேருவதற்கான கட்டணங்களை விட, நன்கொடைகள், மாநில மானியங்கள், மற்றும் பொருட்கள் மற்றும் பிரீமியம் சேவைகளின் விற்பனை போன்றவற்றை நாடியிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள Agora தொடர்பான அனைத்து நிகழ்வுகளில் இருந்தும் கிடைக்கும் வருமானத்தின் சில சதவீதத்தின் மூலமும் நாங்கள் நிதி பெறுகிறோம்.

திறந்த ஆதாரமாகத் திகழும் உலகத்தைப் போன்ற ஒரு மாதிரியை நாங்கள் பின்பற்றுகிறோம்: நீங்கள் எங்கள் அமைப்பு, மெட்டீரியல்கள், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை உங்கள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு பொது கிளப்பாக செய்யவும், அவ்வாறு செய்யும்போது நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த மாட்டீர்கள். இருப்பினும், நீங்கள் முந்தைய அனைத்தையும் பயன்படுத்த விரும்பி, ஆனால் அதனை நிபந்தனைகள் உடைய நபர்களுக்கு மட்டுமே வழங்க விரும்பினால், நீங்கள் கிளப்பிற்கான செயல்பாட்டுக் கட்டணத்தை செலுத்தலாம் அல்லது கட்டணம்-தள்ளுபடி பெறுகிற வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேருவதன் மூலம் ஆதாயத்தை திருப்பி வழங்கலாம். 

 

உறுப்பினர்கள் செலுத்தும் கட்டணம்

 

ஒரு உறுப்பினராக நீங்கள் எந்தக் கிளப்பில் இருக்கிறீர்களோ அந்தக்  கிளப்புகள் வசூலிக்க முடிவு செய்த கட்டணங்களை மட்டுமே நீங்கள் செலுத்துவீர்கள். சில கிளப்புகள் இலவசமானது, மற்ற கிளப்புகளுக்கு அது செயல்படுவதற்கு கட்டணம் தேவைப்படுகிறது.

கட்டணம் வசூலிக்கலாமா வேண்டாமா, எவ்வளவு தொகை வசூலிக்கலாம் மற்றும் எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை ஒவ்வொரு கிளப்பும் தீர்மானிக்க வேண்டும். இத்தகைய கட்டணங்கள் - ஏதேனும் இருந்தால் - அவை நேரடியாக கிளப்பிற்கு செலுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் இவை கிளப்பின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

முழுமையான வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிதிகளின் சரியான பயன்பாட்டை உறுதிப்படுத்த, கட்டணம் வசூலிக்கும் கிளப்புகள் கிளப் நிதி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கும் இணங்கி நடக்க வேண்டும்.

கிளப் கட்டணங்களுக்கு கூடுதலாக, கிளப்புகளுக்கு இடையே போட்டிகள் மற்றும் மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்படும் செலவுகளுக்கும் உறுப்பினர்கள் சிறிய கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கலாம். இத்தைகைய நிகழ்ச்சிகள் முடிந்ததும், அந்த நிகழ்ச்சியின் முடிவைப் பொறுத்து, அந்தக் கட்டணம் உறுப்பினர்களிடம் திருப்பித் தரப்படலாம். விவரங்களுக்கு கிளப் நிதி பிரிவை தயவு செய்து பார்வையிடவும்.

 

கிளப்புகள் செலுத்தும் கட்டணம்

Agora Speakers International-க்கு கிளப்புகள் செலுத்தும் கட்டணமானது கிளப்பின் வகையைப் பொறுத்து இருக்கிறது:

கிளப் கட்டணங்கள் - 2021-2022
கிளப் வகை ஒரு முறை அமைவு (சாசன) கட்டணம் ஒரு உறுப்பினருக்கான கட்டணம் கிளப்பின் குறைந்தபட்ச வருடாந்த கட்டணம்
பொது கிளப் (இளைஞர் கிளப்புகள் உட்பட) 0 0 பொருந்தாது
பொது நலன் கிளப் 0 0 பொருந்தாது
நிபந்தனைகள் உடைய கிளப் 0 ஆண்டுக்கு $42 $336 ( 8 உறுப்பினர்கள் )
கார்ப்பரேட் கிளப் $100 ஆண்டுக்கு $54  $648 (12 உறுப்பினர்கள்)

 

குறைந்தபட்ச கிளப் கட்டணத்தை கிளப்பை பதிவு செய்யும் நேரத்தில் செலுத்த வேண்டும், அது அந்தக் கல்வி ஆண்டு இறுதி வரை (டிசம்பர் 31) செல்லுபடியாகும். கட்டணம் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. உறுப்பினர் கிளப்பில் பதிவு செய்யும்போது, ​​கிளப்பின் குறைந்தபட்ச எண்ணிக்கைக்கு கூடுதலாக இருக்கும் உறுப்பினர்களுக்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும், அக்கட்டணம் சேரும் ஆண்டின் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். மேலும் ​​விகிதமானது மாதந்தோறும் மதிப்பிடப்படுகிறது.

உதாரணமாக:

  • ஒரு கார்ப்பரேட் கிளப் ஜூலை 15, 2020 அன்று 13 உறுப்பினர்களுடன் பதிவு செய்கிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மேலும் 3 உறுப்பினர்கள் இணைகிறார்கள், அக்டோபர் 1 ஆம் தேதி மற்றொரு உறுப்பினர் இணைகிறார்.

முதல் ஆண்டிற்கான கட்டணம் பின்வருமாறு கணக்கிடப்படும்:

  • ஜூலை 15, 2020 அன்று செலுத்த வேண்டிய கட்டணம்: $100 (கிளப் அமைவு கட்டணம்) + 13 உறுப்பினர்கள் x 6 மாதங்கள் (ஜூலை-டிசம்பர்) x $4,5 = $ 451. (ஜூலை 15, 2020 - டிசம்பர் 31, 2020 காலம் வரை செல்லுபடியாகும்)
  • ஆகஸ்ட் 5, 2020 அன்று செலுத்த வேண்டிய கட்டணம்: 3 உறுப்பினர்கள் x 5 மாதங்கள் x $4,5 = $ 67,5 (ஆகஸ்ட் 5, 2020 - டிசம்பர் 31, 2020 காலம் வரை செல்லுபடியாகும்) 
  • அக்டோபர் 1, 2020 அன்று செலுத்த வேண்டிய கட்டணம்: 1 உறுப்பினர் x 3 மாதங்கள் x $4,5 = $ 13,5 (அக்டோபர் 1, 2020 - டிசம்பர் 31, 2020 காலம் வரை செல்லுபடியாகும்)

அடுத்த ஆண்டில் கிளப் ஆனது அதன் அனைத்து உறுப்பினர்களுடனும் தொடர வேண்டுமென்றால், பின்வரும் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்:

  • டிசம்பர் 31, 2020 அன்று செலுத்த வேண்டிய கட்டணம்: 17 உறுப்பினர்கள் x $54 = $918. (ஜனவரி 1, 2021 - டிசம்பர் 31, 2021 காலம் வரை செல்லுபடியாகும்)

 

2021 ஆம் ஆண்டில், அதிகரித்து வரும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, நிபந்தனைகள் உடைய கிளப்புகளுக்கான அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
நிபந்தனைகள் உடைய கிளப்புகள் மற்றும் கார்ப்பரேட் கிளப்புகள் மற்றும் அவற்றின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு பதிவு செய்த உடனேயே Agora ஃபவுண்டேஷன் அனைத்து மெட்டீரியல்களையும், சேவைகளுக்கான அணுகலையும் வழங்குவதால், கிளப்போ அல்லது  தனிப்பட்ட உறுப்பினரோ முன்னதாகவோ அதன் உறுப்பினருரிமையை நிறுத்த முடிவு செய்தால் நாங்கள் கட்டணம் எதனையும் திருப்பி அளிக்க மாட்டோம்.

 

கல்வி மெட்டீரியல்கள்

எந்த Agora கிளப் வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்தக் கிளப் கட்டணம் வசூலித்தாலும் வசூலிக்காவிட்டாலும், Agora உறுப்பினர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் வடிவில் இருக்கும் (இணைய பதிப்புகள்) கல்வி மெட்டீரியல்கள் அனைத்தும் இலவசம். அந்த மெட்டீரியல்களை வேறு தலத்தில் நீங்கள் மீண்டும் வழங்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கூடுதலாக, பதிப்புரிமை கொள்கையின் விதிகளுக்கு உட்பட்டு, உறுப்பினர்கள் கிளப் சந்திப்புகள் மற்றும் பிற Agora நிகழ்ச்சிகளில் (போட்டிகள், மாநாடுகள் போன்றவை) பயன்படுத்துவதற்கு ஏதேனும் மெட்டீரியல்களை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்துக் கொள்ளலாம்.

தொழில்ரீதியாக தோற்றமளிக்கும் புத்தக பதிப்பில் இருக்கும் மெட்டீரியல்களை பெற விரும்பும் உறுப்பினர்கள் அமேசானில் கட்டணம் செலுத்தி ஆர்டர் செய்யலாம்.

Agora உடைய அனைத்து கல்வி மெட்டீரியல்களும் அவை எந்த வடிவில் இருந்தாலும், எந்த மொழிகளில் இருந்தாலும் அவை Agora Speakers International ஃபவுண்டேஷனின் பதிப்புரிமை பெற்றவை என்பதை நினைவில் கொள்க.

 

பல நிபந்தனைகள் உடைய கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கான கட்டண குறைப்பு

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிபந்தனைகள் உடைய கிளப்பில் உறுப்பினராக இருந்தால், கிளப்கள் உங்கள் கட்டணத்தை ஒரு முறை மட்டுமே Agora Speakers International-க்கு செலுத்த வேண்டும்.

பல கார்ப்பரேட் கிளப்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கோ அல்லது கார்ப்பரேட் கிளப்புகளான நிபந்தனைகள் உடைய கிளப்புகளில் கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த உறுப்பினருரிமைகளுக்கோ இது பொருந்தாது, ஏனெனில் Agora கார்ப்பரேட் கிளப்புகளுக்கு ஃபவுண்டேஷன் ஆனது உறுப்பினர் ஒவ்வொருவருக்குமான கட்டணத்தின் பேரில் சேவையை வழங்குகிறது.

 

கார்ப்பரேட் மற்றும் நிபந்தனைகள் உடைய கிளப்புகளுக்கான கட்டண தள்ளுபடி

புதிய கார்ப்பரேட் அல்லது நிபந்தனைகள் உடைய கிளப்கள் "கிளப் புரவாண்மை" என்கிற பொறிமுறையின் மூலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு தங்கள் கட்டணத்தை தள்ளுபடி செய்யலாம், இதில் அவர்கள் தங்கள் பகுதியில் கிளப்பை உருவாக்கி, புதிய முன்னோடி கிளப்பின் புரவலர்களாக (ஆதரவாளர்களாக) செயல்படுவார்கள்:

  • புதிய கிளப் முன்னோடி கிளப்பின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போது மட்டுமே கட்டண தள்ளுபடி நீடிக்கும். 
  • புதிய கிளப் இலவசமானதாக இருக்க வேண்டும். மதிப்பீட்டு படிவங்களை புகைப்பட நகல்கள் எடுப்பது, பிரிண்ட் செய்வது போன்ற இயக்கச் செலவுகள்  நிபந்தனைகள் உடைய கிளப்பினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • புதிய கிளப்பானது கார்ப்பரேட் அல்லது நிபந்தனைகள் உடைய கிளப் இருக்கும் அதே நகரத்தில் இருக்க வேண்டும்.
  • புதிய கிளப்பானது கார்ப்பரேட் அல்லது நிபந்தனைகள் உடைய கிளப்புக்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு சாசனம் பெற வேண்டும்.
  • ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அதனை சரி செய்ய, கார்ப்பரேட் அல்லது நிபந்தனைகள் உடைய கிளப்பின் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கார்ப்பரேட் அல்லது நிபந்தனைகள் உடைய கிளப்பின் உறுப்பினர்கள்  (தங்கள் சொந்த வருகையுடன்) திறந்தநிலை கிளப்பின் ஒவ்வொரு அமர்விலும் குறைந்தது 12 பேர் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
ஸ்பான்சர் செய்யப்பட்ட கிளப் என்பது ஸ்பான்சர் கிளப்பின் தன்மையைப் பொருட்படுத்தாமல், நேரடியாக மட்டுமே சந்திக்கும் ஒரு கிளப்பாக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக அல்லது பகுதியளவு ஆன்லைன் மூலமாக செயல்படும் கிளப்பிற்கு கிளப் புரவாண்மை மூலம் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய இயலாது.

Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 14:59:44 CET by agora.