Loading...
 

பிராண்ட் வழிகாட்டுதல்கள்

 

 

1. இந்த வழிகாட்டுதல்களின் இலக்கு

  • பிராண்டிங் வழிகாட்டுதல்கள் என்பது Agora Speakers International-லின் பிராண்ட் போர்ட்டலில் இருந்து ஏதேனும் டிஜிட்டல் முறையிலான பலன் தரும் உடைமைகளை பயன்படுத்த விரும்பும் போது பின்பற்ற வேண்டிய அனைத்து விதிகளையும் குறிப்பிடுகின்றன.
  • அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட கிளப்புகள், எண் ஒதுக்கப்பட்ட கிளப்புகள் மட்டுமே ஃபவுண்டேஷனின் டிஜிட்டல் முறையிலான பலன் தரும் உடைமைகளைப் பயன்படுத்தலாம்.
  • ஃபவுண்டேஷன் உடைய குறிக்கோள்கள் மற்றும் பணிகளுடன் நேரடியாக தொடர்புடைய நோக்கங்களுக்காக மட்டுமே கிளப்புகள் பலன் தரும் உடைமைகளை பயன்படுத்தலாம், மேலும் அவற்றை எப்போதும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்கப் பயன்படுத்த வேண்டும். 
  • Agora Speakers International உடைய பலன் தரும் உடைமைகள் அனைத்தும் பதிப்புரிமை மூலம் பாதுகாக்கப்படுகின்றன. கூடுதலாக, லோகோ மற்றும் சுடர் ஆகியவை சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட சின்னங்களாகும்.
  • இந்த வழிகாட்டுதல்கள் எதுவும் அறிவுசார் சொத்து பரிமாற்றத்தை குறிக்கவில்லை. டிஜிட்டல் முறையிலான பலன் தரும் உடைமைகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகள் எந்த நேரத்திலும் மாறலாம். பலன் தரும் உடைமைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஃபவுண்டேஷன் தீர்மானித்தால், இந்தச் பலன் தரும் உடைமைகளைப் பயன்படுத்த ஒரு கிளப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஃபவுண்டேஷன் எந்த நேரத்திலும் ரத்துசெய்யலாம்.

 

2. எங்களது நோக்கம்

Agora Speakers International என்பது உலகெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள தன்னார்வலர்களின் இலாப நோக்கற்ற சங்கமாகும், இது மக்கள் தங்கள் பொது சொற்பொழிவு, தகவல் தொடர்பு, விமர்சன ரீதியான சிந்தனை, விவாதம் மற்றும் தலைமைத்துவ திறமைகளை வளர்க்க உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

 

3. உரை உறுப்புகள்

எங்களது பெயர்

எங்களின் முழுப் பெயர் Agora Speakers International. பின்வரும் விதமாக நீங்கள் எங்களை அழைக்கலாம்:

  • Agora
  • Agora Speakers
  • Agora Speakers International
  • Agora Speakers International Foundation

"Agora" என்பது கிரேக்க மொழியைச் சேர்ந்த பொதுவான வார்த்தை என்றாலும், நீங்கள் "Agora" என்பதை வெறுமனே பயன்படுத்தினால், அதே வார்த்தையைப் பயன்படுத்தும் மற்றும் எங்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாத பிற நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுடன் சில குழப்பங்கள் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

எங்கள் பெயரை மாற்றவோ, மொழிபெயர்க்கவோ அல்லது ஒலிபெயர்ப்பு செய்யவோ கூடாது. இலக்கு மொழி என்னவாக இருந்தாலும், இது எப்போதும் லத்தீன் எழுத்துக்கள் பயன்படுத்தி எழுதப்படுகிறது. பின்வருபவை அந்தப் பெயரை தவறாகப் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுகள்: 

  • Агора
  • Ágora Speakers
  • Agoras Foundation

தவிர, ஒலிப்புக் குறியீடுகள் சொற்களின் உச்சரிப்பைக் குறிக்கும் மொழிகளில் (எ.கா. ஸ்பானிஷ்), தனியாக எழுதப்பட்டால் மட்டுமே Agora-வில் ஒலிப்புக் குறியீட்டைச் சேர்க்க முடியும். எடுத்துக்காட்டாக, Ágora ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஆனால் Ágora Speakers அல்ல.

 

எங்களது பணி குறித்த அறிக்கை

எங்களது பணி குறித்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

“சிறந்த உலகத்தை மும்முரமாக கட்டமைக்கும் தலைச்சிறந்த தகவல்தொடர்பாளராகவும் நம்பிக்கையுள்ள தலைவராகவும் நீங்கள் ஆவதற்கு Agora உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.”


பணி குறித்த அறிக்கையை எந்த வகையிலும் மாற்ற முடியாது, பின்வரும் சூழலில் தவிர:

  • அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு இல்லை என்றால், வேறு மொழியில் மொழிபெயர்ப்பதற்கு
  • மெட்டீரியல்களில் Agora Speakers International லோகோவும் காட்டப்படும் பட்சத்தில், "Agora உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது" என்பதற்குப் பதிலாக, "நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்" என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். வேறு மாற்றீடுகள் அனுமதிக்கப்படாது (உதாரணமாக, "Agora Speakers மாட்ரிட் உங்களுக்கு  உறுதுணையாக இருக்கிறது..." என்று நீங்கள் அதை மாற்றக்கூடாது)

பணி குறித்த அறிக்கையில் வேறு எந்த உரையும் சேர்க்கப்படக்கூடாது.

Agora Speakers உடைய அனைத்து பகுதிகளும் மற்றும் அனைத்து துணை கிளப்புகளும் இந்த ஒரே பொதுவான பணியைப் பகிர்ந்து கொள்கின்றன.

 

டேக்லைன்கள்

நாங்கள் பின்வரும் டேக்லைன்களைப் பயன்படுத்துகிறோம்:

பேசுங்கள். வழி நடத்துங்கள். வரலாறு படைத்திடுங்கள்

புத்திசாலித்தனமாக பேசுங்கள். நம்பிக்கையுடன் வழிநடத்துங்கள்.

Agora Speakers உடைய அனைத்துப் பகுதிகளும், அனைத்து இணைக்கப்பட்ட கிளப்களும் இந்த டேக்லைன்களைப் பகிர்ந்து கொள்கின்றன  கிளப்கள் இவற்றை எந்த வகையிலும் மாற்றக்கூடாது, அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு இல்லை என்றால் உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கலாம்.

கிளப்களுக்கு தனிப்பயன் டேக்லைன்கள் இல்லாமல் இருக்கலாம்.

 

4. காட்சி பண்புக்கூறுகள்

 

முக்கிய வண்ணத் தட்டு

சிவப்பு ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: CC3300
ஆர்ஜிபி: 206, 60, 23
சிஎம்ஒய்கே: 13%, 90%, 100%, 3%

 

மஞ்சள் ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: FF9900
ஆர்ஜிபி: 247, 175, 15
சிஎம்ஒய்கே: 2%, 34%, 100%, 0

 

கரு     ஊதா

ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: 660033
ஆர்ஜிபி: 86,15,59
54%, 99%, 46%, 47%

 

வெள்ளை   கருப்பு

 

இரண்டாம் நிலை வண்ணத் தட்டு

ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: FFCCCC
ஹெக்ஸ்: F9D7CF
ஆர்ஜிபி: 249,215,207
சிஎம்ஒய்கே:1%,17%,13%,0%

  ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: FF6666
ஹெக்ஸ்: F47C60
ஆர்ஜிபி: 244,124,96
சிஎம்ஒய்கே:0%,64%,62%,0%
  ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: cc3300
ஹெக்ஸ்: CC3C17
ஆர்ஜிபி: 204,60,23
சிஎம்ஒய்கே:14%,90%,100%,4%
  ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: 993333
ஹெக்ஸ்: A0353B
ஆர்ஜிபி: 160,53,59
சிஎம்ஒய்கே:26%,90%,75%,19%
 
ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: FFFFCC
ஹெக்ஸ்: F4F2D4
ஆர்ஜிபி: 244,242,212
சிஎம்ஒய்கே:4%,2%,19%,0%
  ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: FFFF99
ஹெக்ஸ்: F7E99A
ஆர்ஜிபி: 247,233,154
சிஎம்ஒய்கே:4%,4%,49%,0%
  ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: CC9933
ஹெக்ஸ்: D1952A
ஆர்ஜிபி: 209,149,42
சிஎம்ஒய்கே:17%,43%,100%,0%
  ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: 996633
ஹெக்ஸ்: 976B1E
ஆர்ஜிபி: 151,107,30
சிஎம்ஒய்கே:34%,54%,100%,18%
 
ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: CC99CC
ஹெக்ஸ்: CCB2D6
ஆர்ஜிபி: 204,178,214
சிஎம்ஒய்கே:18%,31%,0,0
  ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: 666699
ஹெக்ஸ்: 765285
ஆர்ஜிபி: 118,82,133
சிஎம்ஒய்கே:62%,77%,22%,4%
  ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: 003366
ஹெக்ஸ்: 15416E
ஆர்ஜிபி: 21,65,110
சிஎம்ஒய்கே:99%,80%,32%,18%
  ஹெக்ஸ் வெப் பாதுகாப்பானது: 333366
ஹெக்ஸ்: 351C4D
ஆர்ஜிபி: 53,28,77
சிஎம்ஒய்கே:88%,98%,37%,37%

 

 

லோகோ பயன்பாடுகள்

 

முழு கிடைமட்ட வடிவம்   சதுர வடிவம்
Full Horizontal   Square Format
முழு கிடைமட்ட வடிவம்.   சதுர வடிவ லோகோவானது தேவைப்படும் டிஜிட்டல் மீடியாவிற்கு  (ஐகான்கள், பயன்பாட்டு மென்பொருள்கள் போன்றவை) மட்டுமே பயன்படுத்தப்படும்
எளிமைப்படுத்தப்பட்ட கிடைமட்ட வடிவம்
Simplified Horizontal   அசல் வணிகப் மெட்டீரியல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, இதில் லோகோவின் அளவு மற்றும் இலக்கு மெட்டீரியலின் தெளிவுத்திறன் ஆகியவை சிறந்த விவரங்களைக் கொண்டிருப்பதை சாத்தியமற்றதாக்குகிறது. இத்தகைய பயன்பாடுகளுக்கு, லோகோவின் அகலம் 5 செமீக்கு மேல் இருக்கக்கூடாது.

லோகோ இடைவெளி மற்றும் அளவு

 

லோகோ இடைவெளி   குறைந்தபட்ச அளவுகள்

Logo Spacing Large

Logo Spacing Small

காட்டப்பட்டுள்ளபடி, லோகோவைச் சுற்றி "S" என்ற எழுத்தின் குறைந்தபட்ச இடைவெளியை எப்போதும் விடவும்.
 

பிரிண்ட்
Min Size Print
2cm
 
வெப்
Min Size Web
128px

 

லோகோ வேறுபாடுகள்

லோகோவின் பின்வரும் வேறுபாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் பிராண்ட் போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Logo Var 1
தெளிவான பேக்கிரவுண்டில் கிரேஸ்கேல்
Logo Var 2
அடர் பேக்கிரவுண்டில் வண்ணம்
Logo Var 3
அடர் பேக்கிரவுண்டில் வெள்ளை

 

லோகோவில் செய்யக்கூடாதவை

லோகோவை எந்த வகையிலும் மாற்ற முடியாது. குறிப்பாக பின்வருவனவற்றை செய்ய வேண்டாம்:

Donts 1

எந்தக் கூறுகளையும் மாற்றாதீர்.
  Donts 2

நிறங்களை மாற்றாதீர்.
  Donts 3

உரையைத் தனிப்பயனாக்காதீர்.
 
Donts 4

எஃபக்ட்களைப் பயன்படுத்தாதீர்.
  Donts 5

வடிவ விகிதத்தை மாற்றாதீர்.
  Donts 6

சுழற்றவோ அல்லது வளைக்கவோ செய்யாதீர்.
 
Donts 7

கம்மியான மாறுபாடு உள்ள பேக்கிரவுண்டில் வைக்காதீர்.
  Donts 8

தட்டுகளில் இல்லாத வண்ணங்களில் காட்டாதீர்.
  Donts 9

லோகோவில் அல்லது கீழே பிற கூறுகளை வைக்காதீர்.
 
Donts 10

லோகோவை மற்ற கூறுகளுடன் இணைக்காதீர்.
  Donts 11

லோகோவை பேக்கிரவுண்டாக பயன்படுத்தாதீர்.
  Donts 12

லோகோவின் கூறுகளை பிரிக்காதீர்.
 
Donts 13

லோகோவை மொழிபெயர்க்காதீர்.
  Donts 14

குறைந்த தெளிவுத்திறன் அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்தாதீர்.
  Donts 15

தெளிவாகப் படிக்கத் தடையாக இருக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தாதீர்.
 
Donts 16

உலோக மைகளில் அச்சிடாதீர்.
       

 

 

மற்ற லோகோக்களுடனான சேர்க்கை

ஸ்பான்சர்களின் பட்டியல், சந்திப்பு நடைபெறும் இடங்கள் அல்லது ஒத்த துணை சந்திப்பு தொடர்பான அமைப்புகளில் இவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, லோகோ, முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, கிளப் சாராத லோகோவுடன் இணைந்து இடம்பெறாது. கடைசியாக கூறப்பட்ட சூழலில், ஸ்பான்சர் செய்யப்படுவது கிளப்(கள்) அல்லது நிகழ்வுகளே, அது Agora Speakers International அல்ல என்பதில் எந்த குழப்பமும் இருக்கக்கூடாது

 

அனுமதிக்கப்பட்டவை அனுமதிக்கப்படாதவை
Donts 19 Donts 20

 

எழுத்துருக்கள்

ABCDEFGHIJKLMNOPRQR
STUVWXYZ
முக்கிய எழுத்துரு CapitalisTypOasis ஆகும். இதில் பெரிய எழுத்துகள் (மற்றும் லத்தீன்-1 தொகுப்பு மட்டும்), எண்கள் மற்றும் நிறுத்தற்குறிகள் மட்டுமே உள்ளன.
ABCDEFGHIJKLMNOPRQRSTUV
WXYZabcdefghijklmnopqrstuwxyz
01234567890[]()!?={}*/&%\
áéíóúâêîôûàèìòùñÑäëïöüçÇ
முழு UNICODE எழுத்துருவான American Garamond BT இரண்டாம் நிலை எழுத்துருவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

5. தனிப்பயனாக்க மெட்டீரியல்கள்

Agora Speakers International allows clubs a lot of flexibility in the use of brand material and digital assets to create their own logos, certificates, rewards, stationery, even merchandising, and to produce all the materials locally or order them from the provider the club finds most appropriate.

Custom M 1   Custom M 2   Custom M 3

கிளப்புகள், நிகழ்ச்சிகள் (மாநாடுகள், போட்டிகள் போன்றவை), புவியியல் பகுதிகள் (எ.கா., ஒரு நகரத்தில் உள்ள அனைத்து கிளப்களின் துண்டுப்பிரசுரம்), மொழி ரீதியான குழுக்கள் (எ.கா., ஜெர்மன் ஸ்பீக்கர்ஸ்) போன்றவற்றில் அவற்றின் பயன்பாட்டிற்காக தனிப்பயனாக்கப்பட்ட மெட்டீரியல்கள் உருவாக்கப்படலாம். ஆனால் இவை தனிநபர் பயன்பாட்டிற்காக உறுப்பினர்களால் உருவாக்கப்படாமல் இருக்கலாம் (எ.கா., ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்பில்லாத உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக தனிப்பயனாக்கப்பட்ட வணிக அட்டை).
இந்த வழிகாட்டியில், சுருக்கமாக கூறுவதற்காக, இவை அனைத்தையும் "கிளப்" மெட்டீரியல்கள் என்று பொதுவாகக் குறிப்பிடுவோம், மேலும் கிளப்பின் பெயர் மற்றும் லோகோ, நிகழ்ச்சி, புவியியல் பகுதி, மொழி ரீதியான குழு அல்லது இதற்கு ஒத்தவை "கிளப்பின் பெயர் மற்றும் லோகோ" என்று குறிப்பிடப்படும்.

தனிப்பயனாக்கப்பட்ட மெட்டீரியல்கள் அனைத்தும் பின்வரும் விதிகளுக்கு இணங்க வேண்டும்:

  • துணை விதிகளுக்கு இணங்க வேண்டும்.
  • கிளப்களால் மட்டுமே உருவாக்கி பயன்படுத்தப்படலாம்.
  • Agora Speakers International உடைய பணியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
  • Agora Speakers International உடனான தொடர்பு கண்டிப்பாக காட்டப்பட வேண்டும்.
  • Agora லோகோவின் பயன்பாடு பிராண்ட் வழிகாட்டுதல்களுடன் இணங்க வேண்டும்.
  • மெட்டீரியல்களுக்கு எதிராக மூன்றாம் தரப்பினரின் ஐபி உரிமைகோரல்களுக்கு மெட்டீரியலின் ஆசிரியர் மட்டுமே பொறுப்பாவார்.
  • கிளப் பெயர் மற்றும்/அல்லது அதன் லோகோ எப்பொழுதும் இருக்க வேண்டும், மேலும் இவை Agora-வை விட சிறியதாக இருக்கக்கூடாது, மேலும் இருக்கும் மற்ற லோகோக்களை விட எப்போதும் குறிப்பிடத்தக்க வகையில் தெரியும்படி இருக்க வேண்டும்.
    (ஒரு கிளப் உருவாக்கிய தனிப்பயனாக்கப்பட்ட மெட்டீரியல் Agora Speakers International உடைய அதிகாரப்பூர்வ மெட்டீரியல் என்று மக்கள் நினைப்பதைத் தவிர்ப்பதற்காக).
  • கிளப்புகள் அவற்றை லோக்கலில் தயாரிக்கலாம் அல்லது பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு வழங்குநரிடமிருந்தும் அவற்றை ஆர்டர் செய்யலாம்.
  • தொடர்புத் தகவல் இருந்தால், கிளப்பின் தொடர்புத் தகவல் மற்றும் Agora Speakers International உடைய தொடர்புத் தகவல் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் Agora Speakers International இன் இணையதள முகவரி இடம்பெற வேண்டும் (www.agoraspeakers.org)

 

6. வருவித்த பலன் தரும் உடைமைகள்

வருவித்த மெட்டீரியல்கள் என்பது அதிகாரப்பூர்வ டெம்ப்ளேட்களை மாற்றியமைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட மெட்டீரியல்கள் அல்லது Agora Speakers International உடைய டிஜிட்டல் முறையிலான பலன் தரும் உடைமைகளை பகுதியளவு உள்ளடக்கியது (எ.கா: லோகோவின் பகுதிகள், பணி அறிக்கையின் பகுதிகள், Agora என்ற பெயரின் எழுத்துரு மற்றும் வண்ணம் போன்றவை)
உதாரணத்திற்கு:

Custom M 4

இந்த பகுதிகள் இந்த லோகோவை «வருவித்த» ஒன்றாக ஆக்குகின்றன

அனைத்து வருவித்த பலன் தரும் உடைமைகளும், தனிப்பயனாக்கப்பட்ட பலன் தரும் உடைமைகளுக்கான விதிகளுக்கு கூடுதலாக, பின்வரும் விதிகளுக்கு இணங்க வேண்டும்:

  • வருவித்த எந்தவொரு மெட்டீரியலின் மீதும் அறிவுசார் சொத்துரிமைகள் வலியுறுத்தப்படவோ அல்லது கோரப்படவோ முடியாது.
    எடுத்துக்காட்டாக, Agora-வின் டிஜிட்டல் முறையிலான பலன் தரும் உடைமைகளைப் பயன்படுத்தி உங்கள் கிளப்பிற்கான சில வணிக அட்டைகள் அல்லது லோகோக்களை நீங்கள் உருவாக்கினால், அவற்றை நீங்கள் பதிப்புரிமை அல்லது அந்த முத்திரைக்கு சட்ட ரீதியான உரிமம் பெறக்கூடாது
  • இவைகள் சித்தாந்தங்கள், மதங்கள், அரசியல் கட்சிகள் அல்லது உலகக் கண்ணோட்டங்கள் போன்றவற்றை தொடர்புபடுத்தக் கூடாது.

 

7. இணைப்பை காட்சிப்படுத்துவது

இணைக்கப்பட்ட அனைத்து கிளப்களும் ஃபவுண்டேஷனுடன் தங்கள் தொடர்பை வெளிப்படையாகக் காட்ட வேண்டும். Agora Speakers International உடனான தொடர்பை, Agora Speakers லோகோவைச் சேர்ப்பதன் மூலமும், விருப்பத்தின் பேரில் "இணைந்துள்ளது" அல்லது அதற்கு இணையான வார்த்தையைச் சேர்ப்பதன் மூலமோ காட்சிப்படுத்தலாம். கிளப் பெயர் மற்றும்/அல்லது லோகோ Agora Speakers உடைய லோகோவை விட சிறியதாக இருக்கக்கூடாது.

சரியல்ல சரி
Affil 1 Affil 2

 

8. வருவித்த லோகோக்கள்

Agora Speakers International ஆனது அதிகாரப்பூர்வ லோகோவில் இருந்து வருவித்த கிளப் லோகோக்களை உருவாக்க கிளப்புகளை ஊக்குவிக்கிறது.

Derived 1

 

வருவித்த லோகோவில் பிற அடையாளம் காணக்கூடிய லோகோக்கள் அல்லது ஏதேனும் வகையான சின்னங்களின் எந்த கூறுகளும் இடம்பெறக் கூடாது.

அனுமதி இல்லை அனுமதிக்கப்பட்டது
Derived 2 Derived 3

 

வருவித்த லோகோவில் பிற அடையாளம் காணக்கூடிய லோகோக்கள் அல்லது ஏதேனும் வகையான சின்னங்களின் எந்த கூறுகளும் இடம்பெறக் கூடாது.
(மற்ற லோகோவின் சட்டச் சூழலைப் பொருட்படுத்தாமல், நீங்கள் சட்டப்பூர்வ உரிமையாளராக இருந்தாலும் அல்லது அதைப் பயன்படுத்த அங்கீகாரம் பெற்றிருந்தாலும் கூட. "சின்னங்கள்" என்பது ஒருவித உலகக் கண்ணோட்டத்துடன் (அரசியல், கருத்தியல் அல்லது மதம்) தொடர்புடைய அல்லது வேறு ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய சுருக்கக் குறியீடுகளைக் குறிக்கிறது. இது பாரிஸின் சின்னமாக இருக்கும் ஈபிள் கோபுரம் அல்லது அமெரிக்காவின் அடையாளமாக இருக்கும் கழுகு அல்லது ஸ்பெயினின் சின்னமாக இருக்கும் டான் குயிக்சோட் போன்ற குறியீட்டு அந்தஸ்தைப் பெற்றவைகளைக் குறிக்கவில்லை)

அனுமதிக்கப்பட்டது அனுமதி இல்லை
Derived 4 Derived 5

 

Agora Speakers International உடனான இணைப்பு அனைத்து தகவல்தொடர்புகளிலும் தோன்ற வேண்டும்.

சரியல்ல சரி
Affil 3 Affil 4

 

9. எழுதுபொருட்கள்

கிளப் பேனர்

பிராண்ட் மற்றும் கிளப் இருப்பின் உலகளாவிய நிலைத்தன்மையை பராமரிக்க, பேனரை வைத்திருக்க விரும்பும் எந்தவொரு கிளப்பும் அதிகாரப்பூர்வ வடிவமைப்பு மற்றும் அளவைப் பயன்படுத்த வேண்டும். முதலில் ஒரு கிளப் பேனர் வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு கிளப் ஒரு பேனரை வைத்திருக்க விரும்பினால், அது அதிகாரப்பூர்வமான ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே இந்த தேவை குறிக்கிறது.

Stationary 1

கிளப் பேனர்

தரம் மற்றும் மெட்டீரியல்கள் ஒரே மாதிரியாக இருக்கும் வரை, கிளப்புகள் லோக்கலில் பேனரைத் தயாரிக்கலாம் அல்லது எந்தவொரு வழங்குநரிடமிருந்தும் வாங்கிக் கொள்ளலாம்.

பிற கூறுகள்

மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் (வணிக அட்டைகள், ஃபிளையர்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை), பிராண்ட் போர்ட்டலில் பரிந்துரைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்துவதில், அவற்றை மாற்றியமைப்பதில் அல்லது புதியவற்றை வடிவமைப்பதில் கிளப்கள் முழுமையான இலகுத்தன்மையைக் கொண்டுள்ளன, அத்துடன் அவை பின்வரும் வரையறைகளைக் கொண்டுள்ளன:

  • வடிவமைப்பானது மெட்டீரியல்களை உருவாக்குவதற்கான பிராண்ட் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
  • வடிவமைப்பானது, இது ஒரு கிளப்பால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு அல்லது எழுதுபொருள் என்பதையும், இது Agora Speakers International உடைய அதிகாரப்பூர்வ வெளியீடு அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

 

10. வெளியீடுகள்

கிளப்களின் வெளியீடுகள்

கிளப்புகள் அனைத்து வகையான வெளியீடுகளையும் (புத்தகங்கள், இதழ்கள், பிரசுரங்கள் போன்றவை) எந்த வடிவத்திலும் (டிஜிட்டல், பிரிண்ட், ஆடியோ போன்றவை) உருவாக்கலாம், மேலும் அதன்:

  • வடிவமைப்பானது மெட்டீரியல்களை உருவாக்குவதற்கான பிராண்ட் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
  • தலைப்பு மற்றும் வடிவமைப்பு தற்போதுள்ள எந்த அதிகாரப்பூர்வ Agora Speakers International  வெளியீட்டிலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது.
  • முன் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் பிற வெளியீடுகளிலிருந்து (Agora Speakers International வெளியீடுகள் உட்பட) எந்த உள்ளடக்கமும் மீண்டும் உருவாக்கப்படக் கூடாது
அனுமதிக்கப்பட்டது அனுமதி இல்லை
Pubs 1
 
Pubs 2
அதிகாரப்பூர்வ வெளியீட்டுடன் 
தலைப்பு முரண்படுகிறது
Pubs 3
அதிகாரப்பூர்வ வெளியீட்டுடன் 
வடிவமைப்பு முரண்படுகிறது
Pubs 4
எங்களது பணிக்கு தொடர்பில்லாதது

 

11. விருதுகள்

விருதுகள் என்பது ஒரு நபருக்கு (உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை) அல்லது பிற நிறுவனத்திற்கு கிளப் வழங்கும் அங்கீகாரத்தின் அடையாளமாகும்.
இவற்றில் அடங்குபவை, எடுத்துக்காட்டாக:

சான்றிதழ்கள்
Awards 1
  பின்கள்
Awards 2
  ரிப்பன்கள்
Awards 3
  கோப்பைகள்
Awards 4
 
பதக்கங்கள்
Awards 5
  டிஜிட்டல் பேட்ஜ்கள்
Awards 6
       

 

அதிகாரப்பூர்வ விருதுகள்

 

அதிகாரப்பூர்வ Agora Speakers International விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் Agora Speakers International மூலம் மட்டுமே தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

 

தனிப்பயன் விருதுகள்

கிளப்புகள் தங்களுடைய சொந்த சான்றிதழ்கள், விருதுகள், ரிப்பன்கள் மற்றும் பிற அங்கீகார டோக்கன்களை உருவாக்கி, அவர்கள் விரும்பியபடி வழங்கலாம்:

  • விருது என்பது உண்மையில் நடந்து முடிந்த ஒரு செயல் அல்லது மைல்கல்லைக் குறிக்கிறது (அதாவது, "முயற்சி செய்ததற்கு" சான்றிதழ்கள் வழங்கப்படாமல் போகலாம்)
  • Agora Speakers International உடைய நோக்கம் மற்றும் அதன் துணை விதிகளுக்கு இணங்க செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
  • செயல்கள் அல்லது மைல்கற்களின் விளைவு விருது பெறுபவரின் முயற்சிகள், திறன்கள் மற்றும் அறிவைப் பொறுத்தது (பொருள்: அதிர்ஷ்டம் அல்லது மூன்றாம் தரப்பினரின் தலையீடு சார்ந்த விஷயங்களுக்கு விருதுகள் வழங்கப்படக்கூடாது)
  • விருது பாரபட்சமின்றி (எந்தவொரு உறுப்பினரும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் வழங்கப்பட வேண்டும் 
  • விருதுடன் எந்த பொருளாதார இழப்பீடும் இணைக்கப்படவில்லை.
  • வடிவமைப்பு பிராண்ட் வழிகாட்டிக்கு இணங்கி இருக்க வேண்டும்.
  • இந்த விருது ஏற்கனவே உள்ள அதிகாரப்பூர்வ விருதுக்கு மாற்றீடு அல்ல.
  • விருதை வழங்குவது கிளப் தானே தவிர, Agora Speakers International அல்ல என்பதில் எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது.
  • Agora Speakers International இந்த விருதுகள் அல்லது சான்றிதழ்களை அங்கீகரிக்கும் வகையில் எந்த உரையும் வடிவமைப்பும் இருக்கக்கூடாது.
  • குறைந்தபட்சம் விருது பெற்ற மாதம் மற்றும் ஆண்டு இருக்க வேண்டும். விதிவிலக்காக, வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் விருதுகளில், மாதம் இல்லாமல் இருக்கலாம்.

 

Awards 7

 

சரியான விருதுகளின் எடுத்துக்காட்டுகள்

அனுமதிக்கப்பட்டது
(சான்றிதழ்கள் உதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் விதிகள் அனைத்து வகையான விருதுகளுக்கும் பொருந்தும்)

Awards 8   Awards 9   Awards 10
 
Awards 11   Awards 12    

 

செல்லுபடியாகாத விருதுகளின் எடுத்துக்காட்டுகள்

அனுமதி இல்லை
(சான்றிதழ்கள் உதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் விதிகள் அனைத்து வகையான விருதுகளுக்கும் பொருந்தும்)

Awards 13
Agora Speakers International-லின் பணி நோக்கத்துடன் தொடர்பில்லாதது
  Awards 14
Agora Speakers International இணை வழங்குநர் போல் தெரிகிறது
  Awards 15
பாரபட்சமானது
  Awards 16
நடுநிலை விதியை மீறுகிறது
 
Awards 17
லோகோ பயன்பாடு தொடர்பாக பிராண்ட் வழிகாட்டுதலைப் பின்பற்றவில்லை
  Awards 18
எந்த தொடர்பும் காட்டப்படவில்லை
  Awards 19
ஏற்கனவே உள்ள அதிகாரப்பூர்வ விருதை மேலோங்குகிறது
  Awards 20
தனிப்பயன் மெட்டீரியல்களுக்கான பிராண்ட் வழிகாட்டுதலைப் பின்பற்றவில்லை (ஸ்லைடு 18)

 

12. வணிக மெட்டீரியல்கள்

பின்வரும் நிபந்தனைகளின் கீழ் கிளப்புகள் தங்கள் சொந்த வணிக மெட்டீரியல்களை உருவாக்கி உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுகின்றன:

  • வடிவமைப்பில் எப்போதும் கிளப் லோகோ மிக முக்கிய பகுதியில் சேர்க்கப்பட வேண்டும். விருப்பத்தின் பேரில், Agora Speakers International குறைந்த முக்கியமுடைய நிலையிலும் சிறிய அளவிலும் லோகோ இருக்கலாம்.
  • வடிவமைப்பு பிராண்ட் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
  • வணிக மெட்டீரியல்களின் விற்பனையின் எந்த லாபமும் கிளப் நிதிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அதே நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
  • வணிகப் மெட்டீரியல்கள் உலகம் முழுவதும் விற்கப்படலாம், ஷிப் செய்யப்படலாம்.

அனுமதிக்கப்பட்ட வணிக மெட்டீரியலின் எடுத்துக்காட்டு:

 

Merch 3

 

13. உறுப்பினர் அட்டைகள்

கிளப்கள் சொந்தமாக தங்களின்  உறுப்பினர் அட்டைகள், பெயர் குறிச்சொற்கள் மற்றும் பிறவற்றை லோக்கலில் உருவாக்கி, தயாரிக்க அனுமதிக்கப்படுகின்றன:

  • வடிவமைப்பு பிராண்ட் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
  • கிளப் பெயர் மற்றும்/அல்லது கிளப் லோகோ இடம்பெற வேண்டும்.
  • கிளப்பில் உறுப்பினராக இருப்பதை வடிவமைப்பு தெளிவாக்க வேண்டும்.
  • Agora Speakers International உடைய அதிகாரப்பூர்வ உறுப்பினர் அட்டை என்பதை அந்த வடிவமைப்பு பரிந்துரைக்கக்கூடாது.

 

அனுமதிக்கப்பட்டது அனுமதி இல்லை
Memb 1
Memb 2 Memb 3

 

14. ஆன்லைனில் கிளப்பின் இருப்பு

இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, ஒரு கிளப்பின் ஆன்லைன் "ஆதாரம்" என்பது மின்னஞ்சல் முகவரிகள், டொமைன்கள், இணையதளங்கள், பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் செயலிகள், முகநூல் அல்லது மீட்அப் குழுக்கள், டெலிகிராம் அல்லது யூடியூப் சேனல்கள் போன்ற கிளப்பின் ஏதேனும் ஆன்லைன் இருப்பாகும்.

பின்வரும் இந்த கூடுதல் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால், கிளப்கள் பொருத்தமானதாகக் கருதும் ஆன்லைன் ஆதாரங்களை உருவாக்கலாம்:

  1. உருவாக்கப்பட்ட ஆதாரத்தின் பெயர் கிளப் பெயரிடும் வரம்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் கிளப் பெயருடன் தெளிவாக தொடர்புடையதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் கிளப் Agora Speakers மாட்ரிட் என்று அழைக்கப்பட்டால், மின்னஞ்சல்கள் அல்லது "agoraspeakersspain@gmail.com" அல்லது "speakersbarcelona@gmail.com" போன்ற இணையதளங்கள் பொருத்தமானதாக இருக்காது.
  2. கிளப் லோகோ மற்றும் சர்வதேச லோகோ அனைத்து பக்கங்களிலும் இருக்க வேண்டும், மேலும் இந்த வழிகாட்டுதல்களின்படி பயன்படுத்தப்பட வேண்டும்.
  3. ஃபவுண்டேஷன் உடைய முக்கிய தளத்தை (https://www.agoraspeakers.org) சுட்டிக்காட்ட சர்வதேச லோகோ எப்போதும் ஹைப்பர்லிங்க் செய்யப்பட வேண்டும்.
  4. Agora மெட்டீரியல்கள் மீண்டும் ஹோஸ்ட் செய்யப்படவோ அல்லது மீண்டும் பதிவேற்றம் செய்யப்படவோ கூடாது. அதற்கு பதிலாக அவற்றை இணைக்கவும்.
  5. ஏதேனும் உள்ளடக்கத்தை அணுகுவதற்கு, கிளப் ஆதாரங்களுக்கு பயனர் பதிவு, உள்நுழைவு அல்லது எந்த வகையான உறுப்பினர் உரிமைகளும் தேவைப்படாமல் இருக்கலாம், ஆதாரம் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கும் தளத்தின் உள்ளார்ந்த உள்ளடக்கத்தைத் தவிர.
  6. கிளப்பினால் செய்யப்படும் எந்தவொரு தனிப்பட்ட தரவு சேகரிப்பும் (செய்திமடலை விநியோகிப்பதற்காக மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிப்பது அல்லது நிகழ்ச்சிக்குப் பதிவுசெய்தல் போன்றவை) உள்ளூர் தனியுரிமைச் சட்டங்கள் மற்றும் EU GDPR விதிகள் (கிளப்பின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல்) ஆகிய இரண்டிற்கும் இணங்க வேண்டும். 
  7. ஆன்லைன் ஆதாரத்தில் உள்ள எதுவும் இது கிளப் ஆதாரம் தான், அதிகாரப்பூர்வ Agora Speakers International ஆதாரம் அல்ல என்று குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது.

 

உள்ளடக்க வரையறைகள்

ஏதேனும் கிளப் ஆன்லைன் இருப்பின் எந்தப் பகுதியும் Agora ஃபவுண்டேஷன் உடைய மையக் கோட்பாடுகளுக்கு எதிரான அல்லது அதன் துணை விதிகளுக்கு எதிரான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கக்கூடாது. எப்போதும் போல, "உறுப்பினர்களின் உள்ளடக்கம்" மற்றும் "கிளப்பின் உள்ளடக்கம்" ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு பொருந்தும். கிளப் ஆனது ஒரு நிறுவனமாக நடுநிலைமைக் கொள்கையை மதிக்க வேண்டும், அதாவது கிளப் கையொப்பமிடாத தலையங்கங்கள், கல்லூரிக் கருத்துகள் அல்லது அதிகாரப்பூர்வ வெளியீடுகளை எந்த வகையான அரசியல், தார்மீக, கருத்தியல் அல்லது மதக் கண்ணோட்டத்தையும் அல்லது எந்த வகையான போலி-அறிவியல் உள்ளடக்கத்தையும் வெளியிட முடியாது. எவ்வாறாயினும், பின்வருவனவற்றை பூர்த்தி செய்யும் வரை, அந்த உறுப்பினர்கள் பேச முடிவு செய்யும் எந்தவொரு விஷயத்திலும் தனிப்பட்ட, அடையாளம் காணப்பட்ட உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட உள்ளடக்கத்தை (எந்த வடிவத்திலும் - ஆடியோவிஷுவல் அல்லது வெறும் உரை கட்டுரைகள்) கிளப் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது: 

  • வெளியிடப்பட்ட உள்ளடக்கம் உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து மற்றும் கிளப்பின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • கிளப் ஆனது ஒரு குறிப்பிட்ட திசையில் வெளியிடப்பட்ட உள்ளடக்க தொகுப்பைச் சார்ந்து இருக்கும் எந்தவொரு தலையங்கத் தேர்வையும் பயன்படுத்தாது.
  • கூடுதல் ஒப்புதல்கள் அல்லது சிறப்பம்சங்கள் இல்லாமல், மற்ற எல்லா உள்ளடக்கங்களைப் போலவே இந்த உள்ளடக்கமும் அதே வழியில் வெளியிடப்படும்.
  • உறுப்பினர் கிளப்பில் அல்லது Agora-வில் பதவி வகித்தால், அந்த நிலை கையொப்பத்தில் தோன்றக்கூடாது.

உதாரணமாக, கிளப்பின் அனைத்து உறுப்பினர்களின் சொற்பொழிவுகளையும் கிளப்பின் இணையதளத்தில் வெளியிடும் பாரம்பரியத்தை கிளப் கொண்டிருந்தால் பரவாயில்லை, மேலும் அத்தகைய சொற்பொழிவுகளில் ஒன்று ஜோதிடம் போன்ற போலி அறிவியல் விஷயத்தைப் பற்றியது. எவ்வாறாயினும், கிளப்பின் இணையதளத்தில் ஜோதிடத்தைப் பற்றிய கட்டுரையில் கையெழுத்து இல்லாத அல்லது கிளப்பின் நிர்வாகக் குழு அல்லது அவர்களின் அதிகாரப்பூர்வ கிளப் பாத்திரத்தில் செயல்படும் உறுப்பினர் கையெழுத்திட்டிருந்தால் அது சரியாக இருக்காது. ("வால்டர் கிரிப், கல்வித் துறையின் துணைத் தலைவர்"). மேலும், கிளப் பேச்சுகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு, மேலும் அந்த குறிப்பிட்ட சொற்பொழிவு வெளியிடப்பட்டு ஆனால் மற்றவை வெளியிடப்படவில்லை என்றால், அது சரியாக இருக்காது.

மூன்றாம் தரப்பு தயாரிப்புகள், சேவைகள் மற்றும் நிறுவனங்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்படும் உள்ளடக்கத்தை கிளப் ஹோஸ்ட் செய்யலாம்,  இது ஒரு ஸ்பான்சர் ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் செய்யப்பட்டால் மட்டுமே, கிளப் அதன் செயல்பாட்டிற்குத் தேவையான நிதி அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளின் வடிவத்தில் இழப்பீட்டைப் பெறும், மேலும் விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பு, சேவை அல்லது அமைப்பு ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம் என தெளிவாகக் குறிப்பிடப்படும். 

கார்ப்பரேட் அல்லது நிபந்தனைகள் கிளப்புகள் அவர்கள் இடம்பெறும் நிறுவனங்களுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை (வணிகம் அல்லது விளம்பரம் உட்பட) கட்டுப்பாடுகள் இல்லாமல் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

கண்ணோட்டங்கள் வெளிப்படுத்தப்பட்ட மறுப்பு

கிளப் மற்றும் பிற உறுப்பினர்களின் சொந்தப் பாதுகாப்பிற்காக, உறுப்பினர் உருவாக்கிய அனைத்து உள்ளடக்கமும் பின்வருவனவற்றைப் போன்ற பொறுப்புத் துறப்புடன் இடம்பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது:

"மேலே உள்ள உள்ளடக்கத்தில் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து கண்ணோட்டங்களும் கருத்துக்களும் அதன் ஆசிரியரின் கருத்துக்கள் மட்டுமே. அவை கிளப், மற்ற உறுப்பினர்கள் அல்லது Agora Speakers International ஃபவுண்டேஷனின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கிளப் தன் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் மீது எந்தவொரு தலையங்கக் கட்டுப்பாடு அல்லது உண்மை- அல்லது வேறு ஏதேனும் விதமான சரிபார்ப்புகளை மேற்கொள்வதில்லை. மேலும் உள்ளடக்கம் மற்றும் அதன் செல்லுபடியாகும் தன்மை, சரியான தன்மை, பயன்படுத்தக்கூடிய தன்மை அல்லது ஏதேனும் நோக்கத்திற்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றி நாங்கள் எந்தப் பிரதிநிதித்துவமும் செய்யவில்லை. எந்தவொரு வெளிப்படையான அல்லது மறைமுகமான உத்தரவாதமும் இல்லாமல் உள்ளடக்கம் உள்ளது 'உள்ளபடியே' வழங்கப்படுகிறது. இந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அனைத்துப் பொறுப்பையும் நிராகரிக்கிறோம்"

 

15. கிளப் தகவல்தொடர்புகள்

அதிகாரப்பூர்வ ஃபவுண்டேஷன் செய்திகள் மற்றும் கிளப் சார்பாக அனுப்பப்படும் ஏதேனும் தகவல்தொடர்புகளுக்கு இடையே உள்ள குழப்பத்தைத் தவிர்க்க, அனைத்து கிளப் தகவல்தொடர்புகளிலும் பின்வரும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும், அந்தத் தகவல்தொடர்பு அனுப்பப்பட்ட சேனல் (மின்னஞ்சல், உரையாடல் செய்தி, குழு இடுகை, தனிப்பயன் மொபைல் செயலியில் புஷ் அறிவிப்பு போன்றவை) மற்றும் பெறுநர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல்:

1. செய்தியானது கிளப் லோகோ மற்றும் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும், மேலும் Agora Speakers International லோகோவை பயன்படுத்தக்கூடாது.

2. கிளப் தகவல்தொடர்புகள் அதிகாரப்பூர்வ கிளப் அல்லது Agora வணிகத்திற்காக மட்டுமே அனுப்பப்படலாம் - கிளப் செய்திகள், உறுப்பினருரிமை, சந்திப்புகள், போட்டிகள், பயிற்சிகள் போன்றவை தொடர்பான விஷயங்கள்.

3. தகவல்தொடர்பு கையொப்பத்தில் எப்போதும் "(கிளப் பெயர்), -Agora Speakers International-லின் கிளப் #(xxxx)" என்ற வரி இடம்பெற வேண்டும். எடுத்துக்காட்டாக: "சைலண்ட் டவுன்ஸ் ஸ்பீக்கர்கள்,  Agora Speakers International-லின் கிளப் #2005". தகவல்தொடர்பு ஆங்கிலத்தில் இல்லை என்றால், தொடர்பு கொள்ளும் மொழியில் மாற்றங்கள் அல்லது சேர்க்கைகள் இல்லாமல் அந்த வரி மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

4. கிளப் தகவல்தொடர்புகள் எப்போதும் முக்கிய கொள்கைகளை மதிக்க வேண்டும். மூன்றாம் தரப்பு தயாரிப்புகள், சேவைகள் மற்றும் நிறுவனங்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்படும் உள்ளடக்கத்தை கிளப் ஹோஸ்ட் செய்யலாம்,  இது ஒரு ஸ்பான்சர் ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் செய்யப்பட்டால் மட்டுமே, கிளப் அதன் செயல்பாட்டிற்குத் தேவையான நிதி அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளின் வடிவத்தில் இழப்பீட்டைப் பெறும், மேலும் விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பு, சேவை அல்லது அமைப்பு ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம் என தெளிவாகக் குறிப்பிடப்படும். இருப்பினும், கிளப் தகவல்தொடர்புகள் ஒரு குறிப்பிட்ட மதம், தார்மீக அல்லது அரசியல் நோக்குநிலை, சித்தாந்தம் அல்லது உலகக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்க ஒருபோதும் பயன்படுத்தப்படாது, ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கமாக கூட பயன்படுத்தப்படாது.

அத்தகைய உள்ளடக்கம் (டேக்லைன்கள் (கோஷங்கள்), பொன்மொழிகள் போன்ற வடிவங்களில்) உள்ள கையொப்பங்களும் விளம்பர உள்ளடக்கமாகக் கருதப்பட்டு அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

 

16. வழிகாட்டுதலில் மாற்றங்கள்

இந்த வழிகாட்டுதல்கள் எந்த நேரத்திலும் புதுப்பிக்கப்படலாம். பின்வரும் விதிவிலக்குகளுடன் மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும்:

  • ஏற்கனவே இருக்கும் மெட்டீரியல் (வணிகம், அச்சிடப்பட்ட பிரசுரங்கள், முதலியன), அதே போல் மாற்றத்தின் போது ஆர்டர் செய்யப்பட்ட மற்றும் உற்பத்தியில் இருந்த மெட்டீரியல்கள் மாற்றத்திற்குப் பிறகு ஒரு வருடம் வரை அவர்கள் விரும்பியபடி பயன்படுத்தப்படலாம்.
  • மாற்றத்திற்குப் பிறகு மூன்று மாதங்களுக்குள் பிற மெட்டீரியல்கள் (ஆன்லைன் இருப்பு உட்பட) மாற்றியமைக்கப்பட வேண்டும்.

Page aliases: brand_guidelines


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 14:59:28 CET by agora.