இந்த வழிமுறை கொஞ்சம் சிக்கலானது, குறிப்பாக நீங்கள் நகரத்தின் முதல் கிளப்பிற்குத் தலைமை தாங்குகிறீர்கள் என்றால், கிளப்பின் அடிப்படை மாதிரிகள் எதுவும் இல்லை என்றால். இத்தகைய சூழலில் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்: 1. Agora ஆன்லைன் தளத்தில் பதிவு செய்யுங்கள். ஒற்றை உள்நுழைவு அமைப்பான இது எப்போதும் வளர்ந்து வரும் சேவைகள் மற்றும் அமைப்புகளின் அணுகலை அனுமதிக்கும். (நீங்கள் பதிவுசெய்த பிறகு, நீங்கள் இந்தப் பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்). 2. இந்தக் குட்டி அறிமுக விளக்கக்காட்சியை பார்வையிடுங்கள். 15 நிமிடங்கள் 3. பின்வரும் பதிவு செய்யப்பட்ட பயிற்சி அமர்வைக் கேட்டிடுங்கள். 2 மணிநேரங்கள் 4. சமீபத்திய Agora வழிகாட்டியை 1-2 நாட்கள். படித்திடுங்கள். விக்கி குறித்து உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், குறிப்பாக பின்வரும் பிரிவுகள் அடிக்கடி மாறும், மேலும் அதன் விளக்கங்களும் வழிகாட்டியில் காலாவதியாகி இருக்கும். அடிப்படை கல்வி வரிசை அமைப்பின் செயல்திட்டங்கள், இவை புதிதாக சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வரிசை அமைப்பாகும். வெவ்வேறு சந்திப்பு பிரிவுகள் மற்றும் பாத்திரங்கள். பிராண்ட் வழிகாட்டுதல்கள், Agora உடைய டிஜிட்டல் வளங்களைப் பயன்படுத்தி மெட்டீரியல்களை உருவாக்கும் சிந்தனையை நீங்கள் கொண்டிருந்தால். கிளப்புகளுக்கான செயல்பாட்டு தேவைகள். 5. பதிவு செய்யப்பட்ட மாதிரி சந்திப்பை காணுங்கள் (2 மணிநேரங்கள்). இது வழிகாட்டியின் பெரும்பாலான கூறுகளைக் காட்டுகிற திருத்தப்படாத அசல் வீடியோ. அனுபவமிக்க பாத்திரங்கள் பங்கேற்கும் சந்திப்பின் சில சிறந்த காட்சிகளைக் காட்ட முயற்சிப்பதற்கு பதிலாக, உண்மையில் சந்திப்பு எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் நோக்கில் தொழில்முறை அல்லாத வழியில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது (சாதக பாதக விஷயங்கள் அனைத்துடனும்). 6. எங்கள் யூடியூப் சேனலில் உள்ள டுடோரியல் வீடியோக்களை காணுங்கள், இவை வெவ்வேறு பாத்திரங்களைப் பற்றிய விளக்கங்களையும், அதற்கான குறிப்புகளையும் அளிக்கின்றன. சேனலில், உலகளவில் இருக்கும் கிளப்களின் பதிவுசெய்யப்பட்ட சந்திப்புகளின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம் - சந்திப்பிற்கு நேரடியாகவும் சென்று பங்கேற்கலாம், ஆன்லைன் வாயிலாகவும் காணலாம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், தயவுசெய்து எங்களை info@agoraspeakers.org என்னும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக அல்லது எங்கள் சமூக நெட்வொர்க் சேனல்கள் மூலம் தொடர்பு கொள்ளத் தயங்க வேண்டாம் (உதாரணமாக, எங்களது அதிகாரப்பூர்வமான முகநூல் குழு https://www.facebook.com/groups/agoraspeakers/ ).