Loading...
 

தலைவர்

 

 

கிளப் தலைவர் என்பவர் வெவ்வேறு கிளப் அலுவலர்கள் அனைவரின் ஒருங்கிணைப்பாளராகவும், ஒட்டுமொத்த கிளப் வியூகத்தின் வடிவமைப்பாளராகவும், வெளிப்புற நிகழ்வுகளில் கிளப்பின் பிரதிநிதியாகவும் திகழுகிறார்.

கிளப்புகளில் தலைமைப் பாத்திரங்கள்

Agora-வில், அலுவலர் பதவிகளை வெறும் நிர்வாக அல்லது செயல்பாட்டு ரீதியான பாத்திரங்களாக நாங்கள் கருதுவதை விட தலைமைத்துவம் நிறைந்த பதவிகளாக நாங்கள் காண்கிறோம். இருப்பினும் இவற்றில் பல வித்தியாசங்கள் உள்ளன, அவை

  • தனக்குள்ள பங்கினை மட்டுமே செயல்படுத்தும் பாத்திரங்கள் வேறொருவரின் யுக்தியை செயல்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் தலைமையகம் செய்ய வேண்டிய அனைத்தையும் தீர்மானித்து, அதனை செயல்படுத்தும் பணியை மட்டும் ஒரு அலுவலரிடம் ஒப்படைக்கும், அவர் அந்தச் செயல்பாட்டினை நிறைவேற்றி விட்டு, அது குறித்த அறிக்கைகளை தலைமையகத்திற்கு வழங்குவார்.
  • நிர்வாக ரீதியாக மட்டும் செயல்படும் பாத்திரங்களுக்கு இன்னும் கொஞ்சம் சுதந்திரம் உள்ளது, ஆனால் இவற்றின் தலைமைத்துவமானது முற்றிலும் செயல்பாட்டு ரீதியானது. இவர்கள் விதிகள், ஒழுங்குமுறைகள், இயக்க நடைமுறைகள் போன்றவற்றை வடிவமைக்கலாம். இவர்கள் அளவிடக்கூடிய குறிக்கோள்களை உருவாக்கலாம், முன்னேற்றத்தைக் கண்காணிக்கலாம், இன்னும் பலவற்றைச் செய்யலாம்.
  • இறுதியாக, தலைமைத்துவப் பாத்திரங்கள் பெரிய விஷயங்களின் மீது கவனம் செலுத்துகின்றன, அதற்கான இலக்கை உருவாக்கி, அந்த இலக்கை செயல்படுத்த தங்கள் அணியை ஊக்குவிக்கின்றன. நல்ல தலைவர்கள் நல்ல மேலாளர்களாகவும் இருந்தால் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், அவர்கள் அந்தப் பணியை செய்ய வேண்டிய அவசியமில்லை.

 

சேவகர் தலைமைத்துவம்

இன்று தலைமைத்துவத்தில் பல ஸ்டைல்கள் உள்ளன - சர்வாதிகார தலைமைத்துவம் (தலைவர் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்) முதல் பரிவர்த்தனை ரீதியான தலைமைத்துவம் (செயல்திறன் மற்றும் விளைவுகள் மீது கவனம் செலுத்தும் தலைமைத்துவம்), தான்தோன்றிப் போக்குடைய தலைமைத்துவம் (மக்கள் தாங்களே விஷயங்களைத் தெரிந்துகொள்ள அனுமதிக்கும் தலைமைத்துவம்) வரை என பல்வேறு ஸ்டைல்கள் உள்ளன. தலைமைத்துவம் வரிசை அமைப்பில் இவற்றை பற்றி இன்னும் விரிவாகக் காண்போம், அப்பகுதியில் இவை சமமான அளவில் பயனுள்ளதாக இல்லை என்பதையும் காண்போம்.

Agora கிளப்புகளைப் பொறுத்தவரை, தலைமைத்துவத்தைப் பற்றிய நமது பார்வை என்னவென்றால், சிறந்த தலைமைத்துவம் என்பது மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நிறைவேற்றப்படுவதாகவே கருதுகிறோம் - நவீன தலைமைத்துவ கோட்பாடு இதனை "சேவகர் தலைமைத்துவம்" என்று அழைக்கிறது (ஆனால் ராபர்ட் கே. கிரீன்லீஃப் என்பவர் 1970 களிலேயே இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்):

மக்களிடம் பணிவு, நம்பகத்தன்மை, ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் முகமைப் பணித்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்தி, வளரச் செய்வதன் மூலம் சேவகர் சேவகர் தலைமைத்துவம் நிரூபிக்கப்படுகிறது. தன்னைப் பற்றி அறிந்துக்கொள்வது, ஆக்கப்பூர்வமான பணி மனப்பான்மை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை மற்றும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் நிர்வாக ரீதியாக வலுவான கவனம் செலுத்துவது ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான மிக முக்கியமான மத்தியஸ்த செயல்முறைகளாக உயர்தர இருவினைசார் தொடர்பு, நம்பிக்கை மற்றும் நேர்மை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுடிர்க் வான் டைரெண்டொங்க், ஈராஸ்மஸ் பல்கலைக்கழகம் - ஜர்னல் ஆஃப் மேனேஜ்மென்ட் தொகுதி. 37 எண் 4, ஜூலை 2011 1228-1261

சேவகர் தலைமைத்துவம் என்பது தார்மீக ரீதியாக ஒரு நல்ல யோசனை மட்டுமல்ல: இந்தக் கூடுதல் குழு செயல்திறன் மற்றும் வளர்ச்சியை தொடர்புபடுத்த நிறைய ஆராய்ச்சிகள் உள்ளன. உதாரணமாக, இதனையும்இதனையும் பார்வையிடவும்.

இந்தக் கண்ணோட்டத்தின் கீழ் சிறந்து விளங்கும் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? 2008 ஆம் ஆண்டில், ராபர்ட் லிண்டனும் அவரது கூட்டுப்பணியாளர்களும் இந்தத் தலைமைத்துவ ஸ்டைலிற்கு மையாக திகழுபவற்றை விரிவாக தெரிவிக்கும் 9 பரிமாணங்களின் தொகுப்பை அடையாளம் கண்டனர்:

 

தலைமைத்துவ பரிமாணம் உள்ளடக்கம்
உணர்வு ரீதியாக சரியாக்குவது மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் செயல்.
சமூகத்திற்கான மதிப்பை உருவாக்குவது சமூகத்திற்கு உதவுவதில் இருக்கும் நனவான, உண்மையான அக்கறை
கருத்தாக்க திறன்கள் மற்றவர்களுக்கு, குறிப்பாக உடனடி பின்தொடர்பாளர்களுக்கு திறம்பட ஆதரவளிக்கும் மற்றும் உதவக்கூடிய நிலையில் இருப்பதற்கு நிறுவனம் குறித்த அறிவையும், பணிகளை கைவசமும் கொண்டிருத்தல்.
அதிகாரம் அளிப்பது சிக்கல்களைக் கண்டறிந்து தீர்ப்பதில், அதே போல பணிகளை எப்போது, எப்படி முடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் விஷயங்களில் மற்றவர்களை, குறிப்பாக உடனடி பின்தொடர்பவர்களை ஊக்குவித்தல் மற்றும் வசதி செய்துக் கொடுத்தல்
வளர்ச்சி துணை அதிகாரிகள் வளரவும் வெற்றிபெறவும் உதவுதல்—ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் மற்றவர்களின் தொழில் ரீதியான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உண்மையான அக்கறையை வெளிப்படுத்துவது
உதவியாளர்களை முதலில் கருத்தில் கொள்வது மற்றவர்களுக்கு (குறிப்பாக உடனடி பின்தொடர்பவர்களுக்கு) தங்கள் பணித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்கான செயல்களையும் சொற்களையும் பயன்படுத்துதல் (இந்த கொள்கையை கடைப்பிடிக்கும் மேற்பார்வையாளர்கள், தங்களுக்கு நியமிக்கப்பட்ட கடமைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக உதவியாளர்களுக்கு உதவ பெரும்பாலும் தங்கள் சொந்த வேலையிலிருந்து அடிக்கடி இடைவேளை எடுத்துக் கொள்வர்.)
நெறிமுறையுடன் நடந்துகொள்வது மற்றவர்களுடன் வெளிப்படையாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் தொடர்புகொள்வது
தொடர்புகள் உடனடி பின்தொடர்பாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, நிறுவனத்தில் உள்ள மற்றவர்களை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், ஆதரிக்கவும் உண்மையான முயற்சியை மேற்கொள்ளும் செயல்
சேவைத்துவம் சுய தியாகம் தேவைப்படும்போது கூட, மற்றவர்களின் கண்ணோட்டத்தில், முதலில் மற்றவர்களுக்கு சேவை செய்யும் ஒருவராக மற்றவர்களால் வகைப்படுத்தப்பட வேண்டும் என விரும்புவது

("சேவகர் தலைமைத்துவம்: பல பரிமாண அளவீடு மற்றும் பல நிலை மதிப்பீட்டின் வளர்ச்சி Servant leadership: Development of a multidimensional measure and multi-level assessment" என்பதிலிருந்து, லிண்டன் மற்றும் பலர், தலைமைத்துவம் காலாண்டு தொகுதி 19, வெளியீடு 2, ஏப்ரல் 2008)

 

கிளப்பின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கிளப்பின் வியூகம்

கிளப் தலைவராக, நீங்கள் கிளப்பையும் அதன் உறுப்பினர்களையும் எதை நோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள், உங்கள் 1 ஆண்டு காலத்தின் முடிவில் அவர்களை எவ்வாறு பார்க்க விரும்புகிறீர்கள், அதை அடைய நீங்கள் என்னென்ன யுக்திகளைப் பயன்படுத்துவீர்கள் என்பதற்கான தொலைநோக்கு பார்வை உங்களுக்கு இருக்க வேண்டும். இதனைப் பொறுத்தவரையில், சேவகர் தலைமைத்துவம் மிகவும் பொருத்தமானது, ஏனென்றால் யுக்தியானது உங்கள் கிளப் மற்றும் உங்கள் உறுப்பினர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும்: அவர்கள் வளர்ச்சி பெறவும், வலுவாக ஆகவும் எப்படி உதவலாம் என்பதை பற்றியதாக இருக்க வேண்டும். அத்தகைய தொலைநோக்குப் பார்வையை நீங்கள் தொலைநோக்குப் பார்வை அறிக்கையில் தெரியப்படுத்துகிறீர்கள், அந்த அறிக்கையானது தற்போது கிளப் எந்த நிலையில் இருக்கிறது, மேலும் நீங்கள் கிளப்பை எதை நோக்கி கொண்டுச் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை சுருக்கமாகக் கூறுவதாக இருக்க வேண்டும்.

தொலைநோக்குப் பார்வையானது பின்வருமாறு இருக்க வேண்டும்:

  • சுருக்கமானது
  • தெளிவானது
  • ஊக்கமளிக்கக்கூடியது
  • சவாலானது
  • அனைத்து உறுப்பினர்களுக்கும் புரியக்கூடியது

அது பின்வருமாறு எளிமையானதாகவும் இருக்கலாம்:

எங்கள் நகரத்திலேயே நட்பு ரீதியான அன்பான கற்றல் சூழலை கொண்டிருப்பது நாங்கள்தான்.

உங்கள் தொலைநோக்குப் பார்வை அறிக்கையை நீங்கள் உருவாக்கும்போது, பிற Agora கிளப்புகள் இருக்கும் சூழலில் உங்கள் கிளப்பைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் ("நாங்கள் அதிக எண்ணிக்கையிலான கைதேர்ந்த பொதுப் பேச்சாளர்களைக் கொண்ட கிளப்பாக இருக்க விரும்புகிறோம்" அல்லது "Agora போட்டிகளில் நாங்கள் அதிக விருதுகளை வெல்ல விரும்புகிறோம்"), உங்கள் கிளப் இருக்கும் சமூகத்தை அடிப்படையாய் வைத்து உங்கள் கிளப்பைப் பற்றி சிந்தியுங்கள்.

சிறந்தத் தலைவர் ஆனவர் - முழு கிளப்பும் உங்கள் தொலைநோக்குப் பார்வை அறிக்கையை "மனதில் கொள்ள வேண்டும்" என்று தூண்டுவார் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

தொலைநோக்குப் பார்வை அறிக்கை மற்றும் கிளப் யுக்தியானது Agora உடைய குறிக்கோள்கள் மற்றும் துணை விதிகளுடன் இணைந்திருக்க வேண்டும். மேலும், இவை எந்தவொரு மைய கொள்கைகளுடனும் முரண்பட முடியாது.

எல்லா கிளப்புகளுக்கும் ஒரே மாதிரியாக யுக்தி வகுப்பது பொருந்தாது. ஒவ்வொரு கிளப்பும் வித்தியாசமானது, அதன் உறுப்பினர்களின் தேவைகளும் வித்தியாசமாக இருக்கும்.

 

அலுவலர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்

கிளப் அலுவலர்களின் ஒருங்கிணைப்பாளராக, ஏற்படும் எந்தவொரு மோதல்களையும் தீர்க்க நீங்கள் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் மற்றும் ஒரு அலுவலரால் குறிப்பிட்ட காலத்திற்கு தனது கடமைகளை செய்ய முடியாவிட்டால் தற்காலிக மாற்று அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

ஒரு அலுவலர் தனது பதவிக்காலம் முழுவதும் 2 மாதங்களுக்கும் குறைவாக பொறுப்பில் பங்கெடுக்க மாட்டார் என்றால், ஒரு மாற்று நபரை நியமிப்பது அல்லது மற்ற அலுவலர்கள் மத்தியில் அவருடைய பொறுப்புகளைப் பகிர்ந்துக் கொள்வது சரி. இருப்பினும், அவருடைய மொத்த பங்கெடுப்பு காலம் அதை விட அதிகமாக இருந்தால், மாற்று அலுவலரை நியமிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

 

கிளப்பின் ஒருங்கிணைப்பாளர்

கிளப்பின் தலைவராக, Agora Speakers International ஃபவுண்டேஷனிற்கும் கிளப்பிற்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுவது உங்கள் பொறுப்பு.

குறிப்பாக, நீங்கள் விதிகள், அறிவிப்புகள், திட்ட மேம்பாடுகள், மாற்றங்கள் போன்றவற்றின் அவ்வப்போதைய தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். வழக்கமாக, இவை அதிகாரப்பூர்வ குழு வழியாகத் தெரியப்படுத்தப்படுகின்றன, பதிவுசெய்த அனைத்து கிளப் அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றன. ஃபவுண்டேஷன் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியது, மேலும் நாங்கள் தொடர்ந்து புதிய செயல்பாடுகள், பாத்திரங்கள் மற்றும் ஆன்லைன் மேலாண்மை அமைப்பு முறையை விரிவுபடுத்துகிறோம். ஒரு மாதத்திற்கும் மேலாக எங்களிடமிருந்து எந்த மின்னஞ்சல்களையும் நீங்கள் பெறவில்லை எனில், தயவுசெய்து உங்கள் ஸ்பேம் கோப்புறையை சரிபார்த்து, Agora தலைமையகத்திற்கு நீங்கள் சமர்ப்பித்த மின்னஞ்சல் சரியானதா என்பதை சோதிக்கவும்.

நாட்டிலுள்ள கிளப் மற்றும் பிற Agora நிர்வாக உறுப்பினர்களுக்கு இடையே, குறிப்பாக தூதர்களுக்கு இடையேயும் ஒரு பாலமாக நீங்கள் செயல்பட வேண்டும்.

 

கிளப்பின் பிரதிநிதி

கிளப் தலைவர் ஒரு பிரதிநிதியின் பாத்திரத்தையும் செய்ய வேண்டும், நிகழ்ச்சிகளில், கிளப் சார்பாக மூன்றாம் தரப்பு அமைப்புகளுக்கு முன்பும், மற்றும் ஊடகங்களிடமும் பேச வேண்டும்.

நீங்கள் ஒரு குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நீங்கள் அவர்களுடன் உடன்படுகிறீர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், குழுவின் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. நீங்கள் ஒரு கிளப்பின் பிரதிநிதியாகப் பேசும்போது, நீங்கள் உங்களுக்காகப் பேசுவதைக் காட்டிலும் வேறுபட்ட பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

 

கிளப் பட்ஜெட்

ஏதேனும் வகையான நிதிகளை (அவை கட்டணங்களிலிருந்து பெறப்பட்டதா அல்லது பிற மூலங்களிலிருந்து பெறப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல்) கிளப் நிர்வகித்தால், பதவிக் காலத்தின் தொடக்கத்தில் கிளப்பின் பட்ஜெட்டையும், அதே போல பதவிக் காலத்தின் இறுதியில் இருப்புத் தொகையையும் உறுப்பினர்களிடம் காட்ட வேண்டும்.

கிளப் பட்ஜெட் ஆனது கிளப்பின் நிதி எப்படி செலவிடப்படும் என்பதையும், கிளப் எந்த வருமான ஆதாரங்களைக் கொண்டிருக்கும் என்பதையும் குறிக்கும். வரவுசெலவுத்திட்டத்தை ஒழுங்காக அமைப்பது தலைவர் உடைய பொறுப்பாகும், இது கிளப்பிற்கான அவரது தொலைநோக்குப் பார்வையையும் மூலோபாயத்தையும் பிரதிபலிக்க வேண்டும், மேலும் மீதமுள்ள அலுவலர் குழுவின் தேவைகளையும் அவர்களது உள்ளீட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும் கிளப்பின் உள் ஜனநாயகம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளபடி, பட்ஜெட் ஆனது வாக்கெடுப்பு மூலம் கிளப் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

 

பிற பொறுப்புகள்

கடைசியாக, கிளப் தலைவர்களுக்கு சில கூடுதல் பண்புக்கூறுகள் உள்ளன:

  • கிளப் அலுவலர்கள் குழுவைப் புதுப்பிப்பதற்கு வாக்கெடுப்பு நடத்துவதற்கு அழைப்பது.
  • கிளப்பின் முக்கியமான பிரச்சினைகளுக்கு வாக்களிப்பு அமர்வுகள் நடத்துவதற்கு அழைப்பது.
  • கிளப் நிதிகளின் பயன்பாட்டை அங்கீகரிப்பது (கிளப் பொருளாளருடன் சேர்ந்து).
  • ஆன்லைன் கிளப் மேலாண்மை அமைப்பில் கிளப்பின் தரவை நிர்வகிப்பது

 

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:01:51 CET by agora.