Loading...
 

சொற்பொழிவாற்றும் விதம்

 

தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகள் பிரிவு என்பது சந்திப்பின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்தப் பிரிவின்போது, உறுப்பினர்கள் முன்கூட்டியே தயார் செய்த சொற்பொழிவுகளை வழங்குவர்; அந்தச் சொற்பொழிவானது Agora கல்வித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட கல்வி இலக்குகள் மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.

  • அனைத்து உறுப்பினர்களும் அடிப்படை கல்வி வரிசை அமைப்பிலிருந்து திட்டங்களைத் தொடங்குவார்கள், மேலும் அவை வரிசை முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அடிப்படை வரிசை அமைப்பை நிறைவு செய்த பிறகு, அவர்கள் ஏதேனும் மேம்பட்ட வரிசை அமைப்புகளைத் தொடங்கலாம்.
  • சொற்பொழிவு ஒவ்வொன்றும் திட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்துடன் ஒத்திருக்க வேண்டும்.
  • தயார் செய்யப்பட்ட அனைத்து சொற்பொழிவுகளுக்கும் நேரம் கண்காணிக்கப்படும். குறிப்பிட்ட செயல்திட்டத்தைப் பொறுத்து, அவற்றின் நீளம் 4 முதல் 20 நிமிடங்கள் வரை இருக்கலாம். வழக்கமாக, செயல்திட்டம் எவ்வளவு மேம்பட்டதாக இருக்கிறதோ, அவ்வளவு நீண்ட சொற்பொழிவை வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு சொற்பொழிவுக்கும் யார் சொற்பொழிவு மதிப்பீட்டாளர் என்று முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும், மேலும் அவர் சொற்பொழிவின் குறிக்கோள்களை அறிந்திருக்க வேண்டும். 
  • தயார் செய்யப்பட்ட அனைத்து சொற்பொழிவுகளும் இரண்டு மதிப்பீடுகளைப் பெறும்:
    • நியமிக்கப்பட்ட சொற்பொழிவு மதிப்பீட்டாளரே சந்திப்பின்போது வழங்கும் வாய்மொழி மதிப்பீடு. சொற்பொழிவு மதிப்பீட்டாளர் ஒவ்வொரு திட்டத்தின் இறுதியில் இருக்கும் குறிப்பிட்ட மதிப்பீட்டு அட்டையையும் நிரப்புவார்.
    • கிளப்பின் அனைத்து உறுப்பினர்களாலும் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான மதிப்பீட்டு கருத்து. இந்த எழுத்துப்பூர்வமான மதிப்பீட்டை நிலையான "சொற்பொழிவு பின்னூட்ட படிவத்தை" பயன்படுத்தி வழங்கலாம், இந்தப் படிவத்தை பிராண்டு போரட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
  • அனைத்து தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகளின் தலைப்பும் முற்றிலும் பேச்சாளரின் விருப்பத்திற்குரியதே; தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகள் பொது சொற்பொழிவு அல்லது அதன் தொடர்புடைய எந்த விஷயத்தையும் பற்றியதாக இருக்கக் கூடாது என்பதைத் தவிர. இந்த வரையறையானது, பொது சொற்பொழிவாற்றும் செயல்திட்டங்கள் முக்கியமான செய்திகளை பரப்பும் கருவியாக பார்க்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

தனிப்பயன் சொற்பொழிவுகள்

விதிவிலக்காக, தயார் செய்யப்பட்ட சொற்பொழிவு சிறப்பு வாய்ந்த அல்லது தனிப்பயன் சொற்பொழிவாக இருக்கலாம். இவை எந்த குறிப்பிட்ட கல்வித் திட்டத்தின் செயல்திட்டத்திற்கும் பொருந்தாத சொற்பொழிவுகள், ஆனால் பேச்சாளர் சில காரணங்களுக்காக அதனை பயிற்சி செய்ய விரும்பலாம் - உதாரணமாக, பேச்சாளர் அதை வேறு இடத்தில் சொற்பொழிவாற்ற வேண்டி இருந்து, அதனை கிளப்பில் பயிற்சி செய்ய விரும்பலாம்.

தனிப்பயன் சொற்பொழிவுகள் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களையும் நேரத்தையும் தெளிவாகக் கொண்டிருக்க வேண்டும். சொற்பொழிவு மதிப்பீட்டாளர், சந்திப்பின் தலைவர் மற்றும் சந்திப்பின் நேரம் கண்காணிப்பாளருக்கு இந்த வகை சொற்பொழிவு குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் 'சிறந்த மனிதர்' என்ற தலைப்பில் சொற்பொழிவு  வழங்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மதிப்பீட்டாளருக்கு பின்வரும் விஷயங்களை எழுதி, உங்கள் குறிக்கோள்கள் என்ன என்று அவரிடம் சொல்லலாம்:

  • இயற்கையாகவும் நெருக்கமாகவும் ஒலிக்க வேண்டும்
  • மணமகள்/மணமகள்/தம்பதிகளை மிகவும் நேர்மறையான முறையில் முன்வைக்க வேண்டும்
  • வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும்
  • மணமகள்/மணமகனுடனான உங்கள் உறவு பற்றிய தனிப்பட்ட நிகழ்வுகள் அல்லது கதைகளைப் பயன்படுத்த வேண்டும்

 

நீங்கள் கால வரம்பையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக, சிறந்த மனிதர் சொற்பொழிவுக்கு, "3-4 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம், அதில் 3 நிமிடத்தில் பச்சை சமிக்ஞை, 3:30 நிமிடத்தில் மஞ்சள் சமிக்ஞை, 4:00 நிமிடத்தில் சிவப்பு சமிக்ஞை" என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.

 


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Saturday September 18, 2021 14:30:18 CEST by shahul.hamid.nachiyar.