Loading...
 

சொற்பொழிவின் உள்ளடக்கம்

 

சொற்பொழிவுகளின் உள்ளடக்கம் - "நான் எதைப் பற்றிப் பேசலாம்?"

 

 

Speaker19

ஒரு கிளப்பில், பின்வரும் எல்லைகளுக்குள் நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்:

  • அனைத்து சொற்பொழிவுகளும் உள்ளூர் சட்டத்திற்கு இணங்கும் வகையில் இருக்க வேண்டும். ஆன்லைன் சந்திப்புகளைப் பொறுத்தவரை, கிளப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள அதிகார எல்லை பொருந்தும்.
  • கல்வி ரீதியான வரிசை அமைப்பை பொறுத்தவரையில், சொற்பொழிவுகளின் தலைப்புகள் பொது சொற்பொழிவைப் பற்றியதாக இருக்காது. (உதாரணமாக, குரல் வகை செயல்திட்டத்திற்கு "குரல் வகையை எப்படி பயன்படுத்துவது" என்பதை உங்கள் சொற்பொழிவின் தலைப்பாக நீங்கள் தேர்வு செய்யாமல் இருக்கலாம்). இதில் உள்ள வரையறை என்னவென்றால், முடிவாக மட்டுமல்லாமல் உங்கள் சொற்பொழிவை விரிவுப்படுத்த வெவ்வேறு நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சந்திப்பின் பிற பிரிவுகளில் நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகளுக்கு இந்த வரையறை பொருந்தாது.
  • வெறுக்கத்தக்க வகையிலான சொற்பொழிவு அனுமதிக்கப்படாது. வெறுக்கத்தக்க வகையிலான சொற்பொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் வரையறையை நாங்கள் பயன்படுத்துகிறோம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்: "வெறுக்கத்தக்க வகையிலான சொற்பொழிவு என்பது நபரையோ அல்லது ஒரு குழுவையோ அவர்களை அடையாளப்படுத்தும் விஷயங்களை வைத்து,வேறு விதமாக கூற வேண்டுமென்றால் அவர்களின் மதம், இனம், தேசியம், இனம், நிறம், வம்சாவளி, பாலினம் அல்லது பிற அடையாள காரணிகளின் அடிப்படையில், பேச்சு, எழுத்து அல்லது நடத்தை என ஏதேனும் வகையில் தாக்கி பேசுவது அல்லது பாரபட்சமான மொழியை பயன்படுத்துவது ஆகும். குறிப்பிட்ட மக்கள் குழுவுக்கு அல்லது சமூகத்திற்கு எதிரான வன்முறை, பாகுபாடு, பகைமை அல்லது ஏதேனும் விரோதத்தை தூண்டும் அல்லது ஊக்குவிக்கும் சொற்பொழிவுகள் இதில் அடங்கும்."
  • நகைச்சுவை, விமர்சனம் அல்லது ஒருவரை "புண்படுத்தும்" விதமாக பேசுவது வெறுக்கத்தக்க சொற்பொழிவாக கருதப்படுவதில்லை, மேலும் இந்தப் பகுதி அதை தடுக்கவில்லை என்பதை நினைவில் கொள்க.
  • கிளப்கள் அறிமுகப்படுத்திய வரையறைகள்.
    • ஒவ்வொரு கிளப்பும் சொற்பொழிவுகளில் பேசுவதற்கு அனுமதிக்கப்படும் தலைப்புகளை வரையறுக்கலாம், வரையறைகள் பொதுவானவையாக இருக்க வேண்டும், மேலும் நடுநிலை மற்றும் அறிவுசார் நேர்மை அடிப்படைக் கொள்கைகளை மீற கூடாது.
    • வரையறைகள் நிபந்தனைகள் உடைய தலைப்புகளின் தொகுப்பாகவோ அல்லது கட்டாய தலைப்புகளின் தொகுப்பாகவோ (குறிப்பாக தொழில்முறை, கார்ப்பரேட் அல்லது சிறப்பு ஆர்வம் கொண்ட கிளப்புகளுக்கு) வெளியிடப்படலாம்.
    • வரையறைகளானது நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்.
    • எங்கள் துணைவிதிகளின் படி அமைப்பின் குறிக்கோள்களின் எந்தவொரு விஷயத்திற்கும் எதிராக வரையறைகள் செல்லக்கூடாது.
    • சரியான வரையறைகளுக்கான சில உதாரணங்கள் இதோ இங்கே:

       

      • மதம் குறித்த சொற்பொழிவுகள் அனுமதியில்லை
      • கால்பந்து குறித்த சொற்பொழிவுகள் அனுமதியில்லை
      • கால்பந்து குறித்த சொற்பொழிவுகள் அனுமதியில்லை
      • பிரபலங்கள் குறித்த சொற்பொழிவுகள் அனுமதியில்லை
      • பாலினம் அல்லது பாலியல் குறித்த சொற்பொழிவுகள் அனுமதியில்லை
      • தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்பனை செய்வது குறித்த சொற்பொழிவுகள் அனுமதியில்லை
      • சுய விளம்பரம் தேடும் சொற்பொழிவுக்கு அனுமதியில்லை
      • வரலாறு பற்றிய சொற்பொழிவுகள் மட்டுமே
      • மதங்கள் பற்றிய சொற்பொழிவுகள் மட்டுமே (குறிப்பு: இந்தக் கட்டுப்பாடு மதம் அல்லாதவை பற்றிய சொற்பொழிவுகளை அனுமதிக்க வேண்டும், அதாவது அஞ்ஞானவாதம் அல்லது நாத்திகம் போன்றவை)
      • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சொற்பொழிவுகள் மட்டுமே
      • பயணம் குறித்த சொற்பொழிவுகள் மட்டுமே
      • சட்ட ரீதியான விவாதங்கள் குறித்த சொற்பொழிவுகள் மட்டுமே
      • விற்பனை-சொற்பொழிவுகள் மட்டுமே
      • பணி தொடர்பான சொற்பொழிவுகள் மட்டுமே (பொதுவாக கார்ப்பரேட் கிளப்புகளில் நடைபெறும்)
         
    • தவறான வரையறைகள் சில எடுத்துக்காட்டுகள் மற்றும் அவை ஏன் தவறானவை என்பதற்கான காரணம் இதோ இங்கே:

       

      • நல்ல உணர்வுகளைத் தரும் சொற்பொழிவுகளை மட்டுமே வழங்கவும் (அகநிலை சார்ந்தது)
      • புண்படுத்தும் படியாக எந்தச் சொற்பொழிவும் வழங்க வேண்டாம் (அகநிலை சார்ந்தது)
      • கிளப்பின் நல்ல மனநிலையை சீர்குலைக்கும் சொற்பொழிவுகள் எதனையும் வழங்க வேண்டாம் (அகநிலை சார்ந்தது)
      • அறிவியலில் சந்தேகம் எழுப்பும் சொற்பொழிவுகள் எதனையும் வழங்க வேண்டாம் (துணை விதிகளுக்கு எதிரானது)
      • இஸ்லாம் குறித்து எந்தச் சொற்பொழிவும் வழங்க வேண்டாம் (நடுநிலை அல்லாதது)
      • சம உடைமை பற்றி எந்தச் சொற்பொழிவும் வழங்க வேண்டாம் (நடுநிலை அல்லாதது)
      • அரசாங்கத்தை விமர்சிக்கும் சொற்பொழிவுகள் எதனையும் வழங்க வேண்டாம் (நடுநிலை அல்லாதது)
      • சமதர்மவாத கட்சி குறித்த சொற்பொழிவுகளை மட்டுமே வழங்கவும் (நடுநிலை அல்லாதது)
      • பரிணாமம் குறித்து எந்தச் சொற்பொழிவும் வழங்க வேண்டாம் (துணை சட்டங்களுக்கு எதிரானது)
      • பாரம்பரிய அறிவியல் குறித்த சொற்பொழிவுகள் எதனையும் வழங்க வேண்டாம் (துணை சட்டங்களுக்கு எதிரானது)
      • போலி அறிவியல் குறித்து எந்தச் சொற்பொழிவும் வழங்க வேண்டாம் (நடுநிலை அல்லாதது)
      • எங்கள் போட்டியாளர்களின் தயாரிப்புகள் குறித்த சொற்பொழிவுகள் எதனையும் வழங்க வேண்டாம் (நடுநிலை அல்லாதது)
      • நாசிசம் குறித்த சொற்பொழிவுகள் எதனையும் வழங்க வேண்டாம் (நடுநிலை அல்லாதது)
      • ஹோமியோபதி குறித்த சொற்பொழிவுகளை மட்டுமே வழங்கவும் (துணை சட்டங்களுக்கு எதிரானது)
      • கிறிஸ்தவத்தைப் பற்றிய சொற்பொழிவுகளை மட்டுமே வழங்கவும் (நடுநிலை அல்லாதது)
      • அதிகாரப்பூர்வமற்ற அறிவியல் பற்றிய சொற்பொழிவுகளை மட்டுமே வழங்கவும் (துணை சட்டங்களுக்கு எதிரானது)
      • பாரம்பரியமற்ற மருத்துவம் பற்றிய சொற்பொழிவுகளை மட்டுமே வழங்கவும் (துணை சட்டங்களுக்கு எதிரானது)
         
    • கிளப்பானது சொற்பொழிவுகளின் தலைப்புகளை வரையறுக்க தேர்வுசெய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழலில், கிளப்பின் அனைத்து ஆன்லைன் ஆதாரங்களிலும் (வலைத்தளம், முகநூல் குழு, முதலியன) இந்த வரையறைகளை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும். விருந்தினர்களுக்கும் வருங்கால உறுப்பினர்களுக்கும் இந்த வரையறைகளை வெளிப்படையாக சுட்டிக்காட்ட வேண்டும்.
    • உறுப்பினர்கள் வரையறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

 

  • நிறைவாக, சில செயல்திட்டங்கள் (வழக்கமாக மேம்பட்ட கல்வி வரிசை அமைப்புகளில்) அல்லது செயல்பாடுகள் (போட்டிகள் போன்றவற்றில்) அனுமதிக்கப்பட்ட வகையான சொற்பொழிவுகளை வரையறுக்கலாம் அல்லது குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நீங்கள் பேச வேண்டியிருக்கலாம்.
  • கிளப்பிற்கு வெளியே நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகள் (உதாரணமாக, மாநாடுகளில் கொடுக்கப்படுபவை போன்றவை) கூடுதல் வரம்புகளைக் கொண்டிருக்கலாம். 

ஏதேனும் சந்தேகம் இருந்தால், info at agoraspeakers.org என்கிற மின்னஞ்சல் முகவரி வாயிலாக எங்களுக்கு செய்தி அனுப்பலாம்.

எனது கிளப் நிர்ணயித்த வரையறைகள் குறித்து நான் திருப்தி அடையவில்லை என்றால் என்ன செய்வது?

உங்கள் கிளப்பில் உள்ள வரையறைகள் குறித்து திருப்தி அடையவில்லை என்றால், உங்களுக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன:

  • வரையறைகளானது Agora Speakers International உடைய விதிகளை மீறுவதாக நீங்கள் நம்பினால், தயவுசெய்து கிளப் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்தப் பக்கத்தை சுட்டிக்காட்டி அதை முதலில் கிளப்பிற்குள்ளேயே தீர்க்க முயற்சிக்கவும். சிக்கலை தீர்க்க முடியாவிட்டால், info at agoraspeakers.org என்கிற முகவரி வாயிலாக கிளப் சொற்பொழிவு வரையறைகளின் இணைப்பு அல்லது நகலை எங்களுக்கு அனுப்புங்கள், அவை நிர்ணயம் செய்யப்பட்ட விதிகளை மீறுவதாக நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என்பதை குறிப்பிடுங்கள். மேலும் கிளப்பின் பெயர் மற்றும் எண்ணையும் தெளிவாகக் குறிக்கவும்.
  • நீங்கள் கிளப்பில் மாற்றம் ஏற்பட ஊக்குவிக்கலாம், வாக்களிப்பதற்காக உங்கள் கிளப் உடைய உறுப்பினருரிமைக்கு முன்பாக குறிப்பிட்ட முன்மொழிவை வைக்கலாம்.
     
  • இத்தகைய வரையறைகள் இல்லாத புதிய கிளப்பையும் நீங்கள் எப்போதும் ஆரம்பிக்கலாம்.

 

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 14:59:47 CET by agora.