Loading...
 

அடிப்படை கல்வியின் வரிசை அமைப்பு

 

அடிப்படை கல்வியின் வரிசை அமைப்பில் 16 செயல்திட்டங்கள் 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, இது பொது சொற்பொழிவுக்குத் தேவையான அடிப்படை திறன்களை உங்களுக்கு கற்றுத் தருகிறது.

ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் குறிப்பிட்ட கால வரையறைகள், இலக்குகள், பயன்படுத்தக்கூடிய பொருட்களின் மீதான கட்டுப்பாடுகள் (காட்சி உபகரணங்கள், விரிவுரை வழங்கும் மேசை, முதலியன ...) மற்றும் சொற்பொழிவு திட்டங்கள் என பல விஷயங்கள் உள்ளன. செயல்திட்டங்கள் வரிசை முறையில் நிறைவு செய்யப்பட வேண்டும்.

பொதுவாக, பொது சொற்பொழிவாற்றும் நேரங்களைத் தவிர, நீங்கள் விரும்பும் எதைப் பற்றியும் பேசலாம். உதாரணமாக, 11 ஆம் செயல்திட்டத்திற்கு ("குரல் வகை"), நீங்கள் குரல் வகையைப் பற்றி சொற்பொழிவாற்ற முடியாது. இந்தக் கட்டுப்பாட்டின் இலக்கு என்னவென்றால், அனைத்து நுட்பங்களும் (உடல் பாவனை, குரல் வகை, நகைச்சுவை, முதலியன) மைய செய்திக்கு ஆதரவாக இருக்கும் கருவிகள் மட்டுமே என்பதை உணர வைப்பதற்கே, எனவே அவைகளே மைய செய்தியாக இருக்கக்கூடாது. சொற்பொழிவு ஒன்றில் எந்த விஷயங்களைப் பற்றி பேசுவது செல்லுபடியாகும் என்பதற்கான விரிவான விளக்கத்திற்கு "சொற்பொழிவின் உள்ளடக்கம்" என்ற கட்டுரையைப் பார்வையிடவும்.

ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் குறிப்பிட்ட மதிப்பீட்டு மதிப்பெண் அட்டை உள்ளது, அதனை சொற்பொழிவு மதிப்பீட்டாளர் நிரப்ப வேண்டும். ஒவ்வொரு செயல்திட்ட பக்கத்தின் கீழ் பகுதியில் இந்த மதிப்பெண் அட்டைகள் காணப்படுகின்றன.

 

Eval Form 1

 

Eval Form 2

 


நீங்கள் அடிப்படை கல்வியின் வரிசை அமைப்பை நிறைவு செய்ததும், அதற்கான சான்றிதழ் மற்றும் பேட்ஜை நீங்கள் பெறுவீர்கள்.


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:03:09 CET by agora.