Loading...
 

முதல் செயல்பாடுகள்

 

 

இந்தோனேசியாவுக்கான Agora தூதரான ஆட்டி ரிங்கோ (வலது), Agora Speakers ஜகார்த்தா கிளப்பின் நிறுவனரான நோவியா லுக்மன் (இடது) உடன்
இந்தோனேசியாவுக்கான Agora தூதரான ஆட்டி ரிங்கோ (வலது), Agora Speakers ஜகார்த்தா கிளப்பின் நிறுவனரான நோவியா லுக்மன் (இடது) உடன்

 

Agora Speakers International உடைய புதிய உறுப்பினராக உங்களை வரவேற்கிறோம். நீங்கள் சேர்ந்த கிளப் Agora என்பவற்றுக்கு உலகம் முழுவதும் உள்ள பலவற்றில் ஒன்றாகும்.

அதனால் இப்போது என்ன?

ஒரு புதிய உறுப்பினராக, நீங்கள் ஆரம்பத்தில் சற்று சோர்வாக உணரலாம், ஏற்கனவே உள்ள அனைத்து உறுப்பினர்களும் மிகவும் கைதேர்ந்த பேச்சாளர்கள் என்று கூட நீங்கள் நினைக்கலாம். உண்மை என்னவென்றால், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர்கள் இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில்தான் இருந்தார்கள்.

எப்படி ஆரம்பிப்பது

முதன்முதலில், அனைத்து அறிமுக அத்தியாயம், அத்துடன் எங்களது கல்வித் திட்டம் குறித்த கண்ணோட்டத்தையும் வாசிக்கவும், அவ்வாறு செய்வதன் மூலம் கிளப்புகள் உண்மையில் எப்படி வேலை செய்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

பிறகு, நீங்கள் பாத்திரம் ஒன்றை வகிப்பதன் மூலம் சந்திப்புகளில் பங்கேற்பதற்கு முயற்சிக்க வேண்டும். அது உங்களுக்கு முதல் முறை என்றாலும் பரவாயில்லை - எப்போதுமே ஒவ்வொரு பாத்திரத்திற்கும் முதல் முறை என்ற ஒன்று உள்ளது.

அடுத்த சந்திப்பிற்காக இடுகையிடப்பட்ட நிகழ்ச்சி நிரலைப் பார்வையிடுங்கள் (ஏதேனும் இருந்தால்), எந்தெந்த பாத்திரங்கள் உள்ளன என்பதைப் பார்வையிட்டு, அவற்றில் பங்கெடுப்பதற்கு முன்வாருங்கள். நீங்கள் எந்தப் பாத்திரத்தையும் வகிக்கவில்லை என்றாலும், கிளப் சந்திப்புகளில் கலந்து கொள்வது முக்கியம் - குறைந்தது மாதத்திற்கு இரண்டு முறையாவது கலந்து கொள்வது முக்கியம்.

ஒரு கிளப்பில் இருக்கக்கூடிய பாத்திரங்களின் முழு பட்டியல் இதோ இங்கே. நேரம் கண்காணிப்பாளர், மொழி இலக்கணவாதி,  உபரிச் சொல் கணக்காளர், அல்லது அன்றைய நாளின் சிந்தனை போன்ற எளிமையான பாத்திரத்தை வகித்து நீங்கள் தொடங்குவதை பரிந்துரைக்கிறோம். தானாக முன்வந்து ஒரு பாத்திரத்தை வகிக்க, கிளப்பின் உரையாடல் குழுவில் அல்லது மின்னஞ்சல் பட்டியலில் கேட்கவும் அல்லது திட்டமிடும் தாளில் குறிப்பிடவும்.

Agora உடைய முழு ஆவணங்களும் இந்த விக்கியில் உள்ளன. இதுதான் அதன் அட்டவணை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் படிக்க வேண்டுமென்ற தேவையில்லை (அவ்வாறு செய்வது உங்களுக்கு கடினமாகத் தோன்றும்). சந்திப்பில் நீங்கள் வகிக்கவிருக்கும் பாத்திரம் குறித்து படிப்பது பொதுவாக போதுமானதாக இருக்கும். பல பாத்திரங்களுக்கு அவற்றை எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்த வீடியோ டுடோரியல்கள் உள்ளன.

பேச்சாளர்களுக்கு உங்களது பொதுவான கருத்துக்களை வழங்குவதன் மூலமும் நீங்கள் பங்கேற்கலாம். ஒரு குறிப்பிட்ட சொற்பொழிவின்போது அது எப்படி இருந்தது என்பதை வெளிப்படுத்த தயங்காதீர்கள், உங்களுடைய கண்ணோட்டத்தில் ஏதேனும் விஷயம் சரியாக இல்லை என்பதாக நீங்கள் நினைத்தால் அதைச் சுட்டிக்காட்ட வெட்கப்பட வேண்டாம். இது முறையான மதிப்பீடு அல்ல என்றாலும், பலன்தரக்கூடிய எந்தவொரு கருத்தும் (குறிப்பாக புதிய உறுப்பினர்களிடமிருந்து) எப்போதும் பேச்சாளர்களால் வரவேற்கப்படுகிறது.

இறுதியாக, உங்களுக்கு ஒரு ஆசானை நியமிக்க உங்கள் கிளப்பில் இருக்கும் கல்வியின் தலைவர் அல்லது உங்கள் கிளப் தலைவரிடம் கேளுங்கள். ஆசான் என்பவர் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு உறுப்பினர் ஆவார், அவர் உங்கள் கிளப்பின் உறுப்பினருரிமையை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவும், முதல் செயல்திட்டங்கள் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டவும் உதவுவார்.

 

முக்கியமான விஷயங்கள்:

  • மாதத்தில் குறைந்தது இரண்டு முறையாவது கலந்து கொள்ளுங்கள் - சந்திப்பில் நீங்கள் எந்தப் பாத்திரமும் வகிக்கவில்லை என்றாலும் கூட. உங்களால் நீண்ட காலம் கலந்து கொள்ள முடியாவிட்டால், செயல்பாட்டில் இல்லாததன் காரணமாக உங்களை நீக்குவதைத் தவிர்க்க அது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
  • பெரும்பாலான கிளப்புகளில் சில உள் தொடர்பு சேனல்களைக் கொண்டுள்ளன. இது பகிரப்பட்ட பேஸ்புக் உரையாடல், வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழு அல்லது வேறு ஏதேனும் சேனலாக இருக்கலாம். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கிளப்பின் குழு செய்திகளைப் படிப்பது அவ்வப்போதைய மாற்றங்கள் மற்றும் கிளப் செய்திகள் குறித்து அறிந்த நிலையில் இருப்பதற்கு மிகவும் முக்கியமாகும்.
  • தானாக முன்வந்து, பாத்திரங்களில் பங்கெடுத்து, அதற்காகத் தயார் செய்யுங்கள்.
  • சர்வதேச குழுவில் எங்களது ஃபவுண்டேஷன் தொடர்பான அனைத்து செய்திகளும் வெளியிடப்படும் என்பதால் அதனைக் கண்காணிக்கவும்.

Agora உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், எங்கள் ஃபார்மெட்டில் நீங்கள் போதுமான அனுபவம் பெற்றவுடன், நீங்கள் முன்னேறிச் சென்று, உங்கள் நகரத்திலேயே உங்கள் சொந்த Agora கிளப்பைத் தொடங்கலாம்.

எங்களிடம் தெரிவிக்க விரும்புகிற புதிய யோசனைகள், விமர்சனங்கள், பரிந்துரைகள், கருத்துகள் என அனைத்தையும் நாங்கள் மிகவும் வரவேற்கிறோம். ஃபவுண்டேஷன் ஆனது அதன் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரின் கூட்டு ஞானம், அறிவு மற்றும் அனுபவத்தின் வாயிலாகவே வளர்கிறது. Info at agoraspeakers.org என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக எங்களை தொடர்புகொண்டு விஷயங்களைத் தெரிவிக்கலாம்.

Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 13:46:00 CET by agora.