Loading...
 

கிளப்பின் நோக்கம்

 

 

விகாஷா ஓரேட்டர்ஸ் கிளப்பை தலைமைத்தாங்கும் கோகா பிரசாத்
விகாஷா ஓரேட்டர்ஸ் கிளப்பை தலைமைத்தாங்கும் கோகா பிரசாத்

 

Agora Speakers கிளப்புகள் ஆதரவான நட்பு ரீதியிலான சூழலை வழங்குகின்றன, இது உறுப்பினர்கள் பொது சொற்பொழிவு மற்றும் தலைமைத்துவத்தின் அடிப்படை திறமைகளைக் கற்றுக் கொள்ளலாம், பயிற்சி பெறலாம். பயிற்சி செய்வதை ஊக்குவிக்கும் உற்சாகமான சூழ்நிலையை நீங்கள் காண்பீர்கள், ஆனால் நீங்கள் உங்கள் செயல்திட்டங்கள் மூலம் சமூகத்திற்கு உதவுவதில் பங்களிப்பீர்கள், அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்கள், மேலும் நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து மதிப்புமிக்க கருத்துக்களை பெறுவீர்கள். அடிப்படை வரிசை அமைப்பின் முதல் செயல்திட்டங்கள் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டுவதற்காக ஒரு ஆசானும் உங்களுக்கு துணையாக இருந்து, அடுத்தடுத்த நிலைக்கு நீங்கள் முன்னேறிச் செல்வதற்கு உதவியாக இருப்பார்.

Agora Speakers கிளப்பில் இருப்பது, "நிபுணர்களோ" அல்லது "ஆசிரியர்களோ" அல்ல (மற்றும் கிளப் சந்திப்புகள் பொதுவாக - "கருத்தரங்குகளோ" அல்லது "பட்டறைகளோ" அல்ல) - இந்த கிளப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் சொந்தமாக கற்றுக் கொள்வதற்காகவே இருக்கிறார்கள், ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது, அனைவரும் உங்களுக்கு சமமானவர்களே, அனைவரும் உங்கள் சகாக்களே.

நீங்கள் கிளப்புகளை "மணல் தொட்டியாக" பார்க்கலாம், இதில் உங்கள் பதட்டம், மேடை பயத்தை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளலாம் அல்லது உங்கள் கூச்சத்தை வெல்லும் இடமாக உங்கள் கிளப்புகளை நீங்கள் பார்க்கலாம். பலர் மற்ற இடங்களில் வழங்க வேண்டிய சிறப்பு சொற்பொழிவுகளை பயிற்சி செய்யும் இடமாக கிளப்புகளைப் பயன்படுத்துகின்றனர் - பாராட்டு தெரிவிக்கும் குட்டி சொற்பொழிவுகள் முதல் சிறந்த மனிதர்களின் சொற்பொழிவுகள் வரை, சாதாரண சந்திப்பு விளக்கக்காட்சிகள் முதல் மாநாடுகளில் முக்கிய சொற்பொழிவுகள் வரை என பல வகையான சொற்பொழிவுகளை பயிற்சி செய்யும் இடமாக பலர் கிளப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.

 

கிளப்புகள் சட்டபூர்வமாக சுயாதீனமான முறையில் செயல்படும் அமைப்புகள், Agora Speakers International -லிருந்து தனித்து செயல்படக்கூடியது, ஆனால் அதனுடன் தொடர்புடையது. அதுபோல, உலகெங்கிலும் உள்ள உறுப்பினர்கள் எந்த கிளப்பில் சேர்ந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அனுபவத்தை பெறுவதை உறுதி செய்வதற்கும், அதே நேரத்தில் முழு அமைப்பின் நன்மைக்காக ஆக்கப்பூர்வமாகவும் புதுமையாகவும் செயல்பட தங்களை ஒழுங்கமைக்க கிளப்புகளுக்கு சுதந்திரமும் அதிகாரமும் அளித்துள்ளோம்.

கிளப் சந்திப்புகள்

கிளப் சந்திப்புகள் ஆங்கிலம் அல்லது பல மொழிகளில் நடைபெறலாம், சில கிளப்புகள் இருமொழி கொண்டவை. Agora Speakers உடைய "உத்தியோகபூர்வ" செயல்பாட்டு மொழி ஆங்கிலம் என்றாலும், அந்தந்த பகுதியில் உள்ள பலரைச் சென்றடைய கிளப் மற்றும் குழுக்களை உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துமாறு நாங்கள் தீவிரமாக ஊக்குவிக்கிறோம். உண்மையில் சொல்லப்போனால், ஒரு குறிப்பிட்ட மொழியை இன்னும் சிறப்பாக கற்றுக்கொள்வதற்கு கூட சிலர் கிளப்புகளுக்கு வருவதை நீங்கள் காணலாம்.

ஒரு கிளப் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது இரண்டின் கலவையாகவோ சந்திக்கலாம். மிகப்பெரிய நன்மை நேரடி சந்திப்புகளில் மட்டுமே கிடைக்கிறது, உண்மையில் சொல்லப்போனால், எங்கள் கல்வி திட்டத்தை நிறைவு செய்ய சில நேரடி சந்திப்புகளில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்.

கிளப் சந்திப்பு என்பது சமூக மேம்பட்ட செயல்பாடு அல்ல. சமூக மேம்பாட்டில் தான் உறுப்பினர்கள் மட்டுமே சந்தித்து பேசுவார்கள், அது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலுடன் கவனமாக திட்டமிடப்பட்டு, சந்திப்பு தலைவரால் நடத்தப்படுகிற நிகழ்ச்சியாக இருக்கும் (இது ஒவ்வொரு சந்திப்புக்கும் மாறும் தன்னார்வப் பங்கு). ஒரு சந்திப்பில், "இன்று நாம் பார்வையிட இருப்பது", "உடனடித் தலைப்பு சொற்பொழிவுகள்", "தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகள்" என பல்வேறு "பிரிவுகள்" அல்லது "செயல்பாடுகள்" இடம்பெற்றிருப்பதைக் காண்பீர்கள்:

 

Meeting Sections

 

ஒரு கிளப் சந்திப்பில் டஜன் கணக்கான சாத்தியமான செயல்பாடுகள் நடைபெறும், மேலும் இந்தப் பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கின்றன முழு பட்டியல் குறித்து எங்களிடம் ஒரு சிறப்பு பிரிவே உள்ளது. ஒவ்வொரு செயல்பாடும் வெவ்வேறு திறன்களைப் பயிற்றுவிக்கிறது. தற்போது வரையறுக்கப்பட்ட சில செயல்பாடுகளின் சுருக்கம் இதோ இங்கே:

Activities

 

யார் என்ன செயல்பாட்டை செய்கிறார்கள்? உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் ஆர்வங்கள் மற்றும் திறன்களைப் பொறுத்து அவர்கள் கற்றுக்கொள்ள அல்லது பயிற்சி செய்ய விரும்புகிற பாத்திரத்தை சந்திப்புகளில் வகிக்க தானாக முன்வந்து, அவர்களே முடிவு செய்கிறார்கள்.

விருந்துகள், போட்டிகள், தலைமைத்துவ நிகழ்ச்சிகள் போன்ற பல செயல்பாடுகளையும் கிளப்புகள் ஏற்பாடு செய்கின்றன.

 

நேரம் மற்றும் மதிப்பீடு

வழக்கமாக, கூட்டங்கள் 1 முதல் 2 மணிநேரம் வரை நீடிக்கும், இருப்பினும் சில கிளப்புகளில் 4 மணிநேர சந்திப்புகளை கூட நாங்கள் பார்த்திருக்கிறோம்.

அனைத்து செயல்பாடுகளுக்கும் அவற்றுக்கென ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது - ஒரு நபர் வெறுமனே மேடையில் ஏறி நான்கு மணிநேர சொற்பொழிவை நிகழ்த்த முடியாது. ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கால அளவு உள்ளது, அது நிகழ்ச்சி நிரலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கும்:

 

Agenda Timing

 

விஷயங்களை அறிந்து, மேம்படுத்திக் கொள்வதற்கு, ஒவ்வொரு பங்கேற்பாளரும் செயல்பாட்டின் பொது மதிப்பீட்டு அளவுகோலின் அடிப்படையில் அவரது செயல்திறன் பற்றிய கருத்துக்களைப் பெறுகிறார். கூடுதலாக, உறுப்பினர்களும் விருந்தினர்களும் தங்கள் சொந்த பொதுவான கருத்துக்களையும் வழங்கலாம்.

 

Evaluation

 

செயல்பாட்டு வகைகள்

முன்பு விளக்கியபடி, ஒரு கிளப் சந்திப்பின் போது பல விதமான செயல்பாடுகள் நடைபெறலாம்.

இந்தச் செயல்பாடுகளில் பெரும்பாலானவை (உடனடித் தலைப்பு சொற்பொழிவுகள், இன்றைய நாளின் சிந்தனை போன்றவை) எப்போதும் ஒரே கட்டமைப்பையும் கல்வி இலக்குகளையும் கொண்டுள்ளன. அவர்கள் இடம்பெறும் விஷயங்களில் மாற்றம் செய்தாலும் (நிச்சயமாக, எல்லோரும் எப்போதும் ஒரே விஷயத்தைப் பற்றி 'இன்றைய நாளின் சிந்தனை' என்னும் பிரிவில் பேச மாட்டார்கள்), நோக்கம் மாறாமல் இருக்கும்.

தயார் செய்யப்பட்ட சொற்பொழிவு நடவடிக்கையில் அப்படி இல்லை. தயார் செய்யப்பட்ட ஒவ்வொரு சொற்பொழிவும் ஒரு கல்வி வரிசை அமைப்பை உருவாக்கும் ஒரு வரிசையின் ஒரு பகுதியாகும். செயல்திட்டம் ஒவ்வொன்றுக்கும் உறுதியான இலக்குகள் இருக்கும், அவை ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் வேறுபடலாம். உதாரணமாக, ஒரு செயல்திட்டம் குரல் வகையைப் பற்றியது, மற்றொன்று காட்சி உபகரணங்களைப் பற்றியது, மற்றொன்று உணர்ச்சியைப் பயன்படுத்துவது பற்றியது. மேலும் விரிவான விளக்கத்திற்கு கல்வித் திட்டத்தின் கண்ணோட்டம் என்ற பகுதியைப் பார்க்கவும்.

 

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 14:58:21 CET by agora.