Loading...
 

முன்னுரை

 

Agora வழிகாட்டியின் மூன்றாவது பதிப்பிற்கு தங்களை வரவேற்கிறோம் - Agora Speakers International ஃபவுண்டேஷனைப் பற்றிய அனைத்தையும் விளக்கும் புத்தகம் இது: நாங்கள் யார், நாங்கள் என்ன செய்கிறோம்,  எங்கள் கிளப்பில் நீங்கள் எவ்வாறு பங்கேற்கலாம், புதிய கிளப்பை உருவாக்கி நடத்துவது எப்படி. இந்தப் புத்தகம் கிளப்களின் செயல்பாட்டு அம்சத்தில் கவனம் செலுத்துகிறது. கல்வி ரீதியான வரிசை அமைப்புகள் வெவ்வேறு புத்தகங்களின் பொருளாக இருக்கும்.

ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த பதிப்பில் இருந்து நிறைய மாறிவிட்டது. எங்கள் அனுபவத்திலிருந்து (மற்றும் எங்கள் தவறுகளிலிருந்து!) நிறைய கற்றுக்கொண்டோம், மேலும் விவரங்கள், கூடுதல் உதவிக்குறிப்புகள், கூடுதல் ஆலோசனைகள் மற்றும் பல தேவைகள் மற்றும் நடைமுறைகளை எளிதாக்குவதன் மூலம் ஆவணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நாங்கள் பெரிதும் விரிவுபடுத்தியுள்ளோம். அதேசமயம், கல்வியில் கவனம் செலுத்தும் போது சந்திப்புகள் ஒருபோதும் சலிப்படையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அதிக கல்வி ரீதியான செயல்பாடுகளைச் சேர்த்து, ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்தியும் வருகிறோம்.

இந்த புத்தகம் கிளப் தொடர்பான அனைத்து விக்கி தகவல்களையும்  ( wiki.agoraspeakers.org ) ஒரே இடத்தில் சுருக்கி ஒழுங்கமைத்து தருகிறது. இது மிகவும் தொழில்ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனை எங்கள் உறுப்பினர்கள் இலவச மின்புத்தகமாக பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அதிக தொழில்முறை ரீதியான ஃபினிஷை விரும்புவர் Amazon மூலம் வாங்கிக் கொள்ளலாம். எவ்வாறாயினும், விக்கி ஆனது எதிர்காலத்திற்கான அனைத்து Agora தகவல்களின் மிகவும் புதுப்பித்த ஆதாரமாக எப்போதும் இருக்கும், அத்துடன் அச்சிடப்பட்ட அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிப்புகளில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் இதுவே உண்மையின் ஆதாரமாகவும் இருக்கும். எனவே சமீபத்திய செய்திகள் மற்றும் மாற்றங்கள் குறித்து அறிய விக்கியைப் பார்வையிடவும். இந்த வழிகாட்டியின் சமீபத்திய பதிப்பை அதன் பல்வேறு மொழிகளில் எப்போதும் https://wiki.agoraspeakers.org/ebooks என்ற இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

எப்போதும் போல, அனைத்து கருத்துகளையும், பரிந்துரைகளையும், விமர்சனங்களையும், யோசனைகளையும், குறிப்பாக உங்கள் கதைகளையும் நாங்கள் வரவேற்கிறோம் - உங்கள் கிளப் நிகழ்vuகள், உங்கள் வெற்றிகள், Agora-வில் நீங்கள் கற்றுக்கொண்டவை மற்றும் அது உங்களுக்கு எப்படி உதவியது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த வழிகாட்டியில், அத்தியாயங்களில் ஒன்றில் உங்கள் படம் இடம்பெறும்.

info@agoraspeakers.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது எங்களின் சமூக நெட்வொர்க் சேனல்கள் வாயிலாக ஏதேனும் ஒரு குறிப்பை எங்களுக்கு அனுப்ப தயங்க வேண்டாம் ("எங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது" என்ற பகுதியைப் பார்க்கவும்)

ஆகஸ்ட் 21, 2021 அன்று Agora-வின் 5வது பிறந்தநாள். Agora உடைய கனவு 2016 ஆம் ஆண்டில் மாட்ரிட்டில் ஒரு சிறிய கிளப்பாக தொடங்கப்பட்டதிலிருந்து நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம். அந்த ஒற்றை கிளப் பின்னர் கோர்சோவ் வில்கோபோல்ஸ்கியில் (போலந்து ஒன்று), பின்னர் விசாகப்பட்டினத்தில் (இந்தியா) ஒன்று, பின்னர் காத்மாண்டு  (நேபாளம்) ஒன்று என அணி கோர்த்தது... உலக வரைபடத்தை Agora-வின் வண்ணங்களில் வர்ணம் பூசிக்கொண்டே இருந்ததால், ஒவ்வொரு கிளப்பும் தங்கள் ஆளுமையுடனும் செழுமையுடனும் பட்டியலில் வளர்ந்து கொண்டே இருந்தது. இந்தப் புத்தகத்தில், உண்மையான, அசல் Agora சந்திப்புகளின் பிரத்தியேகமான படங்களைப் பிரதிபலிக்க முயற்சித்திருக்கிறோம் - நடிகர்கள் இல்லை, அரங்கேற்றப்பட்ட காட்சிகள் இல்லை, போட்டோஷாப் இல்லை.

Agora-வின் முயற்சிகள் மற்றும் வியூகத்தின் முக்கிய உந்துதலாக இருக்கின்ற விஷயங்களில் ஒன்று, உலகின் சிறந்த தலைவராகவும், நன்மைக்கான சக்தியாகவும் மாறுவதற்கான விதைகள் அனைவரிடமும் உள்ளது என்ற நம்பிக்கையே. இந்த விதைகள் சரியான சூழலில் வளர வேண்டும், சரியான பயிற்சியைப் பெற வேண்டும், சரியான உறவுகளை நிறுவ வேண்டும் மற்றும் செழிக்க சரியான கருவிகள் வழங்கப்பட வேண்டும். அந்த சூழலைதான் Agora வழங்குகிறது: பரஸ்பர புரிந்துணர்வு, ஒன்றாக இணைந்து கற்றல், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஏற்படுத்தும் வலுவான, ஆரோக்கியமான, சகிப்புத்தன்மைமிக்க, ஆதரவான மற்றும் நட்பு ரீதியான சமூகம்தான் இது.

இந்த காரணத்திற்காக, இந்த வழிகாட்டி மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது:  Agora மெட்டீரியல்கள் அனைத்தும் 30 மொழிகளில் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். ஆங்கிலத்தில் இருந்து கொரியன் மொழி வரை, தாய் மொழியிலிருந்து சுவாஹிலி மொழி வரை, ஜெர்மன் முதல் தமிழ் வமொழி ரை, ஹிந்தி முதல் போர்த்துகீசியம் வரை, உலகின் அனைத்து மூலைகளுக்கும் சென்றடைவதற்கு, நாங்கள் பல மொழிகளில் வழங்கும் மெட்டீரியல்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன. எங்களின் கல்விச் சலுகைகளை விரிவுபடுத்தி உறுப்பினர்களுக்கு இன்னும் கூடுதலான சேவைகளை வழங்குவோம், அதே நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் உள்ளே இருக்கும் தலைவருக்கு பயிற்சி அளிக்கும் எங்கள் இலக்கில் உண்மையாக இருப்போம். இந்த அற்புதமான பயணத்தில் எங்களுடன் இணைந்திடுங்கள், நாம் அனைவரும் ஒன்றாக சரித்திரம் படைத்திடுவோம்.

 

அலெக்சாண்டர் ஹிரிஸ்டோவ்

நிறுவனர், Agora Speakers International

 

டஸ்ட் ஜாக்கெட்

 

"Agora ஆனது சிறந்த உலகத்தை மும்முரமாக உருவாக்கும் சிறந்த தொடர்பாளராகவும், நம்பிக்கையான தலைவராகவும் ஆக்குவதற்கு உங்களை மேம்படுத்துகிறது."

இந்த லட்சிய பணி அறிக்கையுடன், Agora Speakers International ஃபவுண்டேஷன் ஆகஸ்ட் 21, 2016 அன்று உதயமானது. ஒவ்வொரு நபரிடமும் ஒரு உண்மையான தலைவரின் விதையும் நன்மைக்கான சக்தியும் உள்ளது என்பதே எங்களது முக்கிய நம்பிக்கையாக இருக்கிறது, எனவே இவ்வாறு வளருவதற்கு மேப்படுவதற்கும் சரியான சூழலும் கருவிகளும் மட்டுமே தேவை. நடுநிலைமை, பாகுபாடு இல்லாமை, இலாப நோக்கற்ற தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் அறிவுசார் நேர்மை ஆகிய எங்களின் அடிப்படைக் கொள்கைகளை வழிகாட்டியாக கொண்டு,  எங்கள் உறுப்பினர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் கனவுகளைத் தொடர தேவையான பயிற்சியை நாங்கள் வழங்குகிறோம், மேலும் இந்த செயல்முறையின்போது, அவர்களின் சமூகங்களில் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்துகிறோம்.

நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள தன்னார்வலர்களின் உந்துதலுடன், Agora சில ஆண்டுகளில் மிகக் குறுகிய காலத்திலேயே 70 நாடுகள் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் என பறந்து விரிந்தது. ஒரு உண்மையான தொண்டாக, Agora வெற்றிக்கு முக்கியமான அனைத்து நுண் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முற்றிலும் இலவச கல்வித் திட்டத்தையும், பெரிய சர்வதேச அளவிலான நெட்வொர்க்கையும் வழங்குகிறது, இதில் எங்களது உறுப்பினர்கள் நட்பு ரீதியான மற்றும் ஆதரவான சூழலில் ஒன்றாகச் சந்தித்து, பயிற்சி பெறுகிறார்கள் மற்றும் விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களின் இந்தப் பயணத்தின் போது, எங்கள் உறுப்பினர்கள் தங்கள் சமூகங்களில் நீடித்த பலனை ஏற்படுத்தும் நிஜ உலக செயல்திட்டங்களில் பங்கேற்று வழிநடத்துகிறார்கள்.

"The Agora Guide" இன் மூன்றாவது பதிப்பில் Agora Speakers International ஃபவுண்டேஷன் பற்றிய அனைத்தும் உள்ளன: நாங்கள் யார், நாங்கள் என்ன செய்கிறோம், எங்கள் கிளப்பில் நீங்கள் எவ்வாறு பங்கேற்கலாம், மேலும் புதிய கிளப்பை தொடங்கி, அதனை நடத்துவது எப்படி என்பன போன்ற விஷயங்கள் மூன்றாம் பதிப்பில் உள்ளன.

 


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Tuesday November 9, 2021 12:19:02 CET by shahul.hamid.nachiyar.